பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகள் நவ.9-ம் தேதி வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2021

பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகள் நவ.9-ம் தேதி வெளியீடு

 

மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு செப்டம்பர் 2021 தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியல்களாகவே நவ.9 அன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம்  தெரிவித்துள்ளது. மேலும், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


''செப்டம்பர் 2021 மாதத்தில் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக 09.11.2021 காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

செப்டம்பர் 2021 மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களும் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி, மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:

தேர்வர்கள் வருகிற 09.11.2021 அன்று காலை 11 மணி முதல் தங்களது மதிப்பெண் பட்டியல்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரிக்குச் சென்று Result என்ற பகுதியில் உள்ள "Statement Of Marks - Sep 2021, HSE First Year Suppl. Exam - Result" என்ற வாசகத்தை க்ளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து, தங்களது மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 11.11.2021 (வியாழக்கிழமை) மற்றும் 12.11.2021 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.

தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்துகொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்குத் தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம்:

பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.275/-

மறுகூட்டலுக்கான கட்டணம் உயிரியல் பாடத்திற்கு மட்டும் - ரூ.305/-

ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்)- ரூ.205/-

விடைத்தாள் நகல்- இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல் :

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாட்களில், தேர்வர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தங்களது விடைத்தாளின் நகலை இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்''.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம்  தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி