ரயில்வேயில் வேலை: 2206 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2021

ரயில்வேயில் வேலை: 2206 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 

கிழக்கு மத்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தொழிற்சாலையில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


அறிக்கை எண்.RRC/ECR/HRD/Act.App./2021-22


பயிற்சி: Trade Apprentice


காலியிடங்கள்: 2206


வயதுவரம்பு: 15 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்:  ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.


விண்ணப்பிக்கும் முறை: www.rrcecr.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2021

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி