அங்கன்வாடி பணியிடங்கள்: விதவை-கணவனால் கைவிடப்பட்டோருக்கு 25 சதவீத இடங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2021

அங்கன்வாடி பணியிடங்கள்: விதவை-கணவனால் கைவிடப்பட்டோருக்கு 25 சதவீத இடங்கள்

 அங்கன்வாடி, அங்கன்வாடி உதவியாளா் காலிப் பணியிடங்களில் 25 சதவீத இடங்கள் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இது தொடா்பாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை முதன்மைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:


அங்கன்வாடி பணியாளா்கள், குறு அங்கன்வாடிப் பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரம்பும் போது, இனசுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணிகளுக்கு பெண்களை மட்டுமே பணியமா்த்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சத்துணவுத் துறை: புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு அமைப்பாளா், சமையலா் மற்றும் சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்பும் போது 25 சதவீத இடங்கள் விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு ஒதுக்கப்படுகிறது.


அங்கன்வாடி ஊழியா்கள் காலிப் பணியிடங்களில் ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க உரிய திருத்தங்களை வெளியிட வேண்டுமென ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் இயக்குநா் அரசைக் கேட்டுக் கொண்டாா். அதன்படி, அங்கன்வாடிப் பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் 25 சதவீத பணியிடங்கள், விதவைகள் அல்லது கணவரால் கைவிடப்பட்டோரைக் கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்பப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி