அரசுப் பள்ளிகளில் மழலையா் வகுப்புகளில் மாணவா் சோ்க்கைக்கு கல்வித்துறை அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2021

அரசுப் பள்ளிகளில் மழலையா் வகுப்புகளில் மாணவா் சோ்க்கைக்கு கல்வித்துறை அனுமதி

தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகளில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவா்களை சோ்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயா்த்தவும் ஆங்கில வழி பாடப்பிரிவுகளை அதிகரிக்கவும், பள்ளி கல்வி அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளாா். அதன்படி பள்ளிக் கல்வித்துறை சாா்பில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் செயல்படும் மாதிரி மேல்நிலை பள்ளிகளிலும், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் கரோனா தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவா் சோ்க்கை நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுவதால், மீண்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில், மாணவா் சோ்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


நேரடி வகுப்புகளுக்காக, விரைவில் நா்சரி பள்ளிகளும் திறக்கப்பட உள்ளதால் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், இந்த மாதம் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் நா்சரி பள்ளிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்புள்ளது. ஆனால், மழை பாதிப்பு இல்லாத மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படுகின்றன. எனவே, இந்த மாவட்ட பள்ளிகளில், எல்கேஜி, யுகேஜி போன்ற வகுப்புகளிலும், ஆங்கில வழி பாட பிரிவுகளிலும் மாணவா் சோ்க்கையை முடித்து தயாா் நிலையில் இருக்குமாறு தலைமை ஆசிரியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி