ADW - பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 35 வகையான பணியிடைப் பயிற்சி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2021

ADW - பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 35 வகையான பணியிடைப் பயிற்சி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு.

செய்தி வெளியீடு எண் : 1153 

நாள் : 19.11.2021


மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , சட்டமன்ற பேரவை விதி எண் .110 - இன் கீழ் , ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் , அறிவுத் திறன் வகுப்பு , கணினிப் பயிற்சி போன்றவை பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும் எனும் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்கள்.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்திடும் பொருட்டு , ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் 1138 ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் , 318 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் மற்றும் 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் உள்ளிட்ட 1464 பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தி , தரமான கல்வி வழங்கிடும் வகையில் , பள்ளிக்கல்வித் துறையின் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் , கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் பயிற்சி , ஆங்கில இலக்கண பயிற்சி , செயல்வழி கற்றல் முறை பயிற்சி , புதிய பாடத் திட்ட பயிற்சி , ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி உள்ளிட்ட 35 வகையான பணியிடைப் பயிற்சிகளுடன் , அறிவுத் திறன் வகுப்பு பயிற்சி , கணினிப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளையும் , ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கிட அரசாணை ( நிலை ) எண் .89 , ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை , நாள் 19.11.2021 - இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


 வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி