டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறத் தேவையான மெட்டீரியல்( அனைத்து பாடங்களுக்கும்) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2021

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறத் தேவையான மெட்டீரியல்( அனைத்து பாடங்களுக்கும்)

  தினமும் பயனுள்ள இலவச      மெட்டீரியல் வேண்டுமா?

Join our Telegram ==Touch Here

Join our Whatsapp == Touch Here


ஐந்தாண்டுத் திட்டங்கள் மற்றும்
திட்டத்தின் நோக்கம்

1.இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும். 

2.1934- ல் விசுவேசுவரய்யா பொருளாதார வளர்ச்சிக்கான தனது ‘இந்தியாவுக்கான திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற புத்தகத்தில் 10 ஆண்டுகளுக்கான திட்டத்தை உருவாக்கியிருந்தார். 

3.இந்திய அரசுச் சட்டம், 1935-சட்டத்தின் அடிப்படையில் 1937-ல் ராஜதானிகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டது .இதில் எட்டு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது.1937-ல் கூடிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம், ‘தற்போதைய முக்கியமான, மக்களின் (வறுமை, வேலையின்மை, நோய், பஞ்சம், கல்வி, சுரண்டல் போன்ற) உடனடிப் பிரச்சனைகளை ஆராய்ந்து, இவற்றிற்கு தீர்வுகாணும் வகையில் திட்டங்களை வகுத்துக்கொடுக்க வேண்டும் என்று, ராஜதானிகளில் உள்ள நிபுணர்களைக் கேட்டுக்கொள்வதாக’ ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. 

4.நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் வளங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தியும், உற்பத்தியைப் பெருக்கியும், வேலைவாய்ப்பை அதிகரித்தும் மக்களின் வாழ்க்கைத்தரம் வளர வழிசெய்வதற்காக ஒரு திட்டக் குழு உருவாக்கப்பட்டது.  

5.1950 மார்ச் 15-ம்நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதைப் பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும்.ஜவகர்லால் நேருஇதன் முதல் தலைவராவார். 

6.1951ல் முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டது ஆனால் இந்தியா பாக்கிஸ்தான் போரால் 1965ல் தடைபட்டது. அடுத்த இரண்டாண்டுகள் வரட்சியும், நாணய மதிப்பிழப்பும், விலையேற்றமும், வளம் குன்றலும் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இடையூராகயிருந்தது.  

7.அடுத்து மூன்று ஆண்டுத் திட்டங்கள் 1966 முதல் 1969 வரை போடப்பட்டு,  

8.நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 1969-ல் தொடங்கப்பட்டது.1990-91ல் நிலையில்லாத, அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த மத்திய அரசியலால் எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1990ல் தொடங்கப்படவில்லை. அதனால், 1990-91 மற்றும் 1991-92 ஆண்டுகளை ஆண்டுத் திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 1992ல் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது.. 

9.2014 -இல், தனது முதல் சுதந்திர தின உரையில், பிரதம மந்திரிநரேந்திர மோடி, திட்டக் குழு கலைக்கப்படும் என்று அறிவித்தார்.திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. 

10.நிதி ஆயோக் திட்டக்குழுவிற்கு  துணை தலைவராக அரவிந்த் பனகாரியா ஜனவரி 5-ஆம் தேதி 2015 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்,

1

1951 - 1956

உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும் மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துதல்.

2

1956 - 1961

கிராமப் புற இந்தியாவை சீரமைத்தல், தொழில் துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல், பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிக பட்ச வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீராக வளர்ச்சி அடைவதை உறுதிசெய்தல்.

3

1961 - 1966

முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக  இத்திட்டம் அமைந்தது. மேலும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நோக்கி இந்திய மக்களை இட்டுச்செல்லும் வழிகாட்டியாகவும் இது அமைந்தது.

4

1969 - 1974

மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமின்றி ஈட்டப்பட்ட செல்வத்தை மக்கள் அனைவருக்கும் சமமாகப் பிரித்து நாட்டின் செல்வமும் பொருளாதார சக்தியும் சில இடங்களில் மட்டுமே குவிந்திருக்காமல் அவற்றைப்
பரவலாக்குவது.

5

1974 - 1979

உலக அளவில், உணவுப் பொருட்கள், உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் பெரிதும் உயர்ந்தன.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசரத் தேவையாக இருந்தது.

1974-75 இன் மத்தியில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

6

1980 - 1985

வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக் களைதல்.

7

1985 - 1989

உணவு தானிய உற்பத்தி, வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் மக்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குதல்.

8

1992 - 1997

அதிகமான அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முழு அளவு வேலைவாய்ப்பினை எட்டுதல்.

மக்களின் ஒத்துழைப்பின் மூலமும் ஊக்கத்திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை  விளக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல்.
அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளித்தல் மற்றூம் 15 முதல் 35 வயது வரை உள்ள மக்களிடத்து காணப்படும்
எழுத்தறிவின்மையைப் போக்குதல்

அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல்,அடிப்படை மருத்துவ வசதிகளை அளித்தல், நோய் தடுப்பு முறைகளை அளித்தல் மற்றும் தோட்டிப் பணிகளை அற்வே ஒழித்தல்

விவசாய வளர்ச்சி, பல்வகைப் பயிர்களைப் பயிரிடல் மற்றும் ஏற்றுமதி  செய்யக் கூடிய அளவுக்கு தானிய உற்பத்தியைப் பெருக்குதல் மின்னாற்றல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பாசனம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி வளர்ச்சிப் பணிகளைத் தடையின்றி நீடிக்கச் செய்தல்.

9

1997 - 2002

வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் வறுமையை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்தல்.

விலைவாசிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே நேரத்தில் வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல்.

அனைவருக்கும் - குறிப்பாக - பின்தங்கிய சமூகத்தினருக்கு - உணவு மற்றும் சத்துணவை உறுதி செய்தல்
அனைவர்க்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் , அடிப்படை சுகாதார வசதிகள், அடிப்படைக் கல்வி, தங்குமிடம் ஆகியவற்றை குறித்த கால வரையறைக்குள் உறுதி செய்தல்.

மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்.

அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பின் மூலம் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக சுற்றுச்சூழல்  பாதிக்கப் படாமல் காத்தல்.

பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய - அட்டவனை இன மக்கள், பிற பின் தங்கிய இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர் ஆகியோருக்கு அதிகாரம் வழங்குதல்.

பஞ்சாயத்து ராஜ், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க ஊக்கப்படுத்துதல்.

சுய சார்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல்.

10

2002 - 2007

வறுமையைக் குறைப்பது.

வேலைவாய்ப்பைப் பெருக்குவது.

2007 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை எட்டச் செய்வது.

மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை 16.2 விழுக்காடாகக் குறைப்பது.
2007 ஆம் ஆண்டுக்குள் கல்வி ஏற்றோர் எண்ணிக்கையை எழுபத்தைந்து விழுக்காடாக உயர்த்துவது.

குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது.

பேறுகாலத்தில் பெண்கள் இறக்கும் விகிதத்தைக் குறைப்பது.

வனப் பரப்பை அதிகரிப்பது.

2012 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி செய்தல்.

மாசு பட்ட அனைத்து ஆறுகளையும் 2007 ஆம் ஆண்டுக்குள் தூய்மைப் படுத்துவது.

Tnpsc Material

Tamil == Touch Here

Polity == Touch Here

Science ==Touch Here

GK == Touch Here

Current Affairs ==Touch Here
 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி