ஊக்க ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் : தமிழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2021

ஊக்க ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் : தமிழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

 

மத்திய அரசு வழிகாட்டுதல்படி வெளியிடப்பட்டுள்ள ஊக்க ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:


ஆசிரியர்கள் மேற்படிப்பு முடித்தால் வழங்கப்பட்டு வந்த ஊக்கஊதிய உயர்வு கடந்த ஆட்சியில்ரத்து செய்யப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் அண்ணாவால் வழங்கப்பட்ட ஊக்கஊதிய உயர்வு மீண்டும் வழங்கப்படும் என அறிவித்து, கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்த ஊக்க ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து பழைய நடைமுறையைப் பின்பற்றி ஊக்க ஊதிய வழங்க வேண்டுமென கோரி 18.09.2021 அன்று கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


இந்நிலையில் தற்போது ஊக்கஊதியத்துக்கு வரையறுக்கப்பட்ட ஒரு தொகை வழங்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது, ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்கள் மத்தியில் அதிருப்தியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே போல் பணி நியமனத்துக்கு முன் பெற்ற உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் இல்லை என்றும், பணிபுரியும்போது பதவி உயர்வுக்கு ஏற்ற வகையில் உள்ள பாடங்களை படித்தால் மட்டுமே ஊக்க ஊதியம் உண்டு என்ற அறிவிப்பும் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.


இதனால் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின் தங்களின் கல்வி மற்றும் அறிவுசார் நிலையை உயர்த்திக் கொள்ள, உயர் கல்வி பயில வேண்டும் என்ற எண்ணமே தோன்றாத சூழ்நிலை உருவாகிவிடும். எனவே தமிழக அரசு, மத்திய அரசு வழிகாட்டுதல்படி வெளியிட்டுள்ள அரசாணையை முழுவதும் ரத்து செய்ய வேண்டுமென தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.


இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 comments:

  1. வாழ்த்துக‌ள்...சரியான‌ கோரிக்கை...அனைத்து அர‌சூழிய‌ர் ம‌ற்றும் ஆசிரிய‌ர் ச‌ங்க‌ங்க‌ள் இக்கோரிக்கையை உறுதியுட‌னும்,ஒற்றுமையுட‌னும் முன்னெடுத்துச் செல்ல‌ வேண்டும்..

    ReplyDelete
  2. மத்திய அரசு கல்வி கொள்கையை பின்பற்ற மாட்டீர்கள்,ஊக்க ஊதிய உயர்வு மட்டும் மத்திய அரசை பின்பற்றுவீர்.என்னய்யா உங்க ஞாயம்,நீதி. தேர்தல் அறிக்கை கூறிய அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றீர்கள் முதல்வரே,ஊக்க ஊதிய உயர்வு மறுப்பது ஏன்?.தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு,வெற்றி பெற்ற உடன் மாற்றி பேசுகிரீரே முதல்வரே.அரசு ஊழியர்,ஆசிரியர் மொத்த ஓட்டையும் பெற்றுக்கொண்டு ஏமாற்றுகிறேர்களே முதல்வரே.

    ReplyDelete
  3. Central government announced DA Raised 14%.where? When?

    ReplyDelete
  4. இவர்கள் எதையுமே செய்யப் போவதில்லை..‌‌பொதுமாறுதல் கலந்தாய்வு கூட இந்த கல்வியாண்டு நடப்பது சந்தேகமே.... வெறும் வாய் மட்டும் தான்

    ReplyDelete
  5. செங்கோட்டையன் ஐயாவின் மறு உருவம் தான் இப்போது இருக்கும் கல்வி அமைச்சர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி