அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பரில் இடமாறுதல் கலந்தாய்வு புதிய விதிமுறைகளின்படி நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2021

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பரில் இடமாறுதல் கலந்தாய்வு புதிய விதிமுறைகளின்படி நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு.

புதிய விதிகளின்படி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நவம்பரில் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,431 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வழக்கமாக ஆசிரியர் பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும்.

அதன்படி ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விருப்பத்தின்பேரில் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒரே ஒன்றியம் / மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் என 3 பிரிவுகளாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், கரோனா பரவல், சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

இந்நிலையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கு புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். அதற்கேற்ப கலந்தாய்வு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.

பூஜ்ஜிய கலந்தாய்வு

அதன்படி, இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக மாவட்டக்கல்வி அதிகாரிகள், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதாவது அனைத்து பணியிடங்களும் காலிப் பணியிடமாக கருதப்பட்டு பணிமூப்பு அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்பட்டது. இதற்கு பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.

இதையடுத்து ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வை நவம்பரில் நடத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகளை கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது. இதுகுறித்துபள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

கடந்த காலங்களில் வரைமுறையற்ற பணியிட மாறுதல்களால் வட மாவட்டங்களில் அதிக அளவில்காலிப் பணியிடங்கள் உள்ளன.இதனுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு கலந்தாய்வு நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே, பூஜ்ஜிய கலந்தாய்வு, கட்டாய பணியிட மாற்றம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு தவறான தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. அதை நம்பி ஆசிரியர்கள் குழம்ப வேண்டாம். ஆசிரியர்களுக்கு பாதிப்பு இல்லாதவாறுதான் கலந்தாய்வுக்கான வரைவுகொள்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

அதில், புதிதாக பணி நியமனம் பெறுபவர்கள் அந்த இடத்தில் குறிப்பிட்ட காலம்வரை பணிபுரிதல், ஏற்கெனவே ஓரிடத்தில் நீண்டகாலமாக பணிபுரியும் ஆசிரியர்கள் பதவி உயர்வு ஏற்பது, ஒரு பள்ளியில் காலிப் பணியிடம் இருப்பின் மாறுதல் தரக்கூடாது, கலந்தாய்வில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச பணிக்கால வரம்பு உட்பட அடிப்படையான விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவம், குடும்பச் சூழல் உட்பட சில அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். புதிய விதிமுறைக்கான வரைவு அறிக்கை விரைவில் அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்த பிறகு நவம்பரில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.

மேலும், ஒரு பள்ளியில் காலிப் பணியிடங்கள் இருப்பின் நிர்வாக மாறுதலை தவிர்க்கவும் பரிசீலித்து வருகிறோம். எனவே, ஆசிரியர்கள் வீணாக பதற்றம் அடைய வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


14 comments:

  1. யாருப்பா அந்த சிலர்

    ReplyDelete
  2. புத்தகசாலை என்ற இணையதளம் தேர்வர்களிடையேதவறான தகவல்களைச் சொல்லிக் கொண்டுள்ளது..தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற மமதையில் Admin பதிவிடுகிறார்..புரிதலற்ற தகவல்களைப் பதிவிடுகிறார்...பள்ளிக்கல்லித்துறையின் பணிநியமனம்பற்றி அரசாணைப் படி பேசாமல் பொதுப்புத்தியில் பேசுகிறார்..2019ஆம் தேர்வுக்குறிய பணியிடங்களில் 1575(50%)+1160 பணியிடங்கள் இன்னும் பள்ளிக்கல்வித்துறை தேர்வுவாரியத்திடம் ஒப்படைக்கவில்லை..2019-2020,2020-2021க்குரிய கலந்தாய்வு முடிந்த பின்பு தான் 2019ன் Estimate period timeக்குரிய பணியிடங்கள் இணைப்புப் பட்டியலாக வெளியிட்டு தேர்வர்.வ்களைத் தேர்ந்தெடுத்த பின்பு தான் New notification இல் Backlog seet சேர்த்து வெளியிடுவார்கள். அதைத் தான் தற்போது பள்ளிக்கல்வித்துறை செய்கிறது...மேலே குறிப்பிட்டவை எல்லாம் அரசாணைப் படீ குறிப்பிட்டுள்ள செய்திகளே..இது எனது தனிப்பட்ட கருத்தல்ல...நன்றி

    ReplyDelete
    Replies
    1. ௮து ஒ௫ வீணாபோன வெப்சைட் ௭ல்லாம் வீவர்காக புத்தக சாலை இல்லை பு௫டாசாலை.. டுபாக்கூர்

      Delete
    2. பள்ளிக்கல்வி இதை தான் செய்யுது அதை தான் செய்யுது சொல்ற நீ யாரு நீ மட்டும் மேதாவியா. அடுத்த தேர்வு வந்துருச்சு இன்னும் உங்களுக்கு லிஸ்ட் உடுவாங்க. புருடசாலைல பிச்ச எடுத்தப்போ தெரில உனக்கு. பிச்சைக்காரி அல்லி

      Delete
    3. தனிப்பட்ட கருத்து வேற சொல்லுவியாக்கும். துஉஉஉஉஉஉஉஉ எச்சக்கல

      Delete
  3. அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக அனைவரையும் தரம் உயர்த்தவும்

    ReplyDelete
  4. Bro அந்த வயதான பெண் ஆண் மற்றும் பெண்களை மதிக்க தெரியாதவள் ஒரு பெண் கேட்ட கேள்விக்கு உனக்கு எந்த பூசாரி வேணுமோ அவன்கிட்ட கேளு னு தர குறைவா பேசுபவள் அந்த வயதான பெண் கூட வாக்கு வாதம் வைத்து கொள்ளாதீர் தரம் கெட்ட பெண்

    ReplyDelete
    Replies
    1. ராஜலிங்கம் உங்க அம்மா ஊரு மேஞ்சு உன்ன பெத்தானு ஊருக்கே தெரியும் அதனால தான் நீ குஷ்டரோகி அது தெரியுமா உனக்கு. அப்டியே ஒழுங்கு முத்துன வாழக்கவா நீ. தே____பையா

      Delete
    2. புளியங்கொடி பொறுக்கி

      Delete
  5. உன்னோட அம்மா, உன்னோட பொண்டாட்டி குஷ்டத்த பாத்து ஓடிட்டாலே அவ நல்லவளா போட பொட்ட 😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி