ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு.: நாளை மறுநாள் முதல் அமல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2021

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு.: நாளை மறுநாள் முதல் அமல்.

 


ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளதாக வோடபோன்-ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட பிரீபெய்டு கட்டணங்கள், நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.


* 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99-ஆக உயர்வு.

* 28 நாட்களுக்கு 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149-லிருந்து ரூ.179 உயர்வு.  

* 28 நாட்களுக்கு தினமும் 1GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.219-லிருந்து ரூ.269 ஆக உயர்வு.

* 28 நாட்களுக்கு தினமும் 1.5GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.249-லிருந்து ரூ.299 ஆக உயர்வு.

* 28 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.299-லிருந்து ரூ.359 ஆக உயர்வு.

* 56 நாட்களுக்கு தினமும் 1.5GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.399-லிருந்து ரூ.479 ஆக உயர்வு.

* 56 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.449-லிருந்து ரூ.539 ஆக உயர்வு.

* 84 நாட்களுக்கு தினமும் 6GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.379-லிருந்து ரூ.459 உயர்வு.

* 84 நாட்களுக்கு தினமும் 1.5GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.599-லிருந்து ரூ.719 ஆக உயர்வு.

* 84 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.699-லிருந்து ரூ.839 ஆக உயர்வு.

* 365 நாட்களுக்கு 24GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.1499-லிருந்து ரூ.1799 ஆக உயர்வு.

* 365 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.2399-லிருந்து ரூ.2899 ஆக உயர்வு.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி