2 ஆண்டுகளாக பதவி உயர்வு , மாறுதல் கலந்தாய்வு நடத்தாததால் , அரசுப்பள்ளிகளில் 1000 தலைமை ஆசிரியர் பணியிடம் காலி! - kalviseithi

Nov 23, 2021

2 ஆண்டுகளாக பதவி உயர்வு , மாறுதல் கலந்தாய்வு நடத்தாததால் , அரசுப்பள்ளிகளில் 1000 தலைமை ஆசிரியர் பணியிடம் காலி!

'பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி' தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கத்தினர் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பினர்.


மாநிலத்தலைவர் திரிலோகசந்திரன், பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியிருப்பது: 


கொரோனாவால் 2 ஆண்டுகளாக பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. பதவி உயர்வு இல்லாமலே பலர் ஓய்வு பெறும் நிலை உள்ளது. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1000 க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.


மூத்த ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்பாக அதை கவனிக்கும் போது கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. தற்போது புதிதாக அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதால் கூடுதல் ஆசிரியர் தேவை. அதுபோன்ற பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் நிரப்புவது அவசியம். இதற்கிடையே இந்தாண்டு கலந்தாய்வு இல்லை என்பது போன்ற செய்திகள் ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வதந்தி என்பதை தெளிவுப்படுத்தி இந்தாண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும், என்றனர்.3 comments:

 1. VELAI ILLAMAL KATHIRUKIROM UNGALUKKU PADAVI UYARVA

  ReplyDelete
  Replies
  1. நீ வேலைக்கு போனதுக்கு பிறகு பதவி உயர்வு கேட்க மாடியா? 10 வருஷம் ஆனாலும் அப்டியே தான் இருப்பியா? யாரும் இங்கே சும்மா வந்துட்ல கஷ்டப்பட்டு தான் வந்திருக்கோம் .பொது தளங்களில் பேசும் போது கவனமாக பேசு.

   Delete
 2. இப்பவே இப்டி சொல்ற.. உனக்கு வேலை கொடுத்தால் யாரையும் வேலை
  செய்ய உன் நாறவாயி விடாது.. இப்டியே நாறிட்டே திரிஞ்சி ஊரை கெடு ..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி