ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அடுத்தாண்டுக்கு தள்ளிப் போகிறது? - kalviseithi

Nov 15, 2021

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அடுத்தாண்டுக்கு தள்ளிப் போகிறது?

 

தினமலர் செய்தி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்கை, அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கலாமா என, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்


.தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், விருப்பமான இடங்களுக்கு மாறுதல் பெறுவதற்கான கவுன்சிலிங் நடத்தப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. 


இந்த ஆண்டு இயல்பு நிலை திரும்பியுள்ளதால், இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், இடமாறுதல் கவுன்சிலிங்கை அடுத்த ஆண்டுக்கு மாற்றலாமா என, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், பள்ளிகள் மிகவும் தாமதமாகவே திறக்கப்பட்டுள்ளன. கற்பித்தல் பணிகள் நடக்காமல், மாணவர்களின் கற்றல் ஆர்வம் வெகுவாக குறைந்துள்ளது.அதை மீட்டெடுக்கும் வகையில், பள்ளி நேரம் போக, மற்ற நேரங்களில் மாணவர்களுக்கு 'டியூஷன்' எடுக்கும் வகையில், 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை அரசு துவங்கியுள்ளது.


மேலும், பள்ளிகளை நவ., 1ல் திறந்த நிலையில் மறுநாளே மூடப்பட்டது. தீபாவளி மற்றும் மழை காரணமாக தொடர்ச்சியான விடுமுறை விடப்பட்டது.பாடங்களை இன்னும் நடத்த துவங்கவில்லை. அதற்குள் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் அளித்தால், சரியாக இருக்காது என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.


மேலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், திடீரென ஆசிரியர்களை மாற்றினால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும் என்பதால், இடமாறுதல் கவுன்சிலிங்கை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

24 comments:

 1. இப்படி தான் நடக்கும் னு ஏற்கனவே தெரியும்...

  ReplyDelete
 2. நடத்துங்க நடத்துங்க...

  ReplyDelete
 3. Half yearly kidayathu nu minister sonnaru ipo iruku gringa

  ReplyDelete
 4. அவர்களும் சரி இவர்களும் சரி ஒரே மாதிரியான அரசியல் தான்...ஊழியர்களுக்கு பாதிப்பு

  ReplyDelete
 5. எங்கள இன்னும் பைத்தியக்காரணனே நெனச்சிட்டு இருக்கல்ல நீ

  ReplyDelete
 6. இவ்ளோ யோசிக்கிற நீங்க ஏன் ஜூன் ஜூலையில் இதை செய்யல?

  ReplyDelete
 7. Postings poduvangala illa athyum thalli vaippunu soliruvangala

  ReplyDelete
 8. மத்தவங்க கஷ்டங்கள் யாருமே யோசிப்பதில்லை. 2 வருஷமா கவுன்சிலிங் நடத்தவில்லை இப்போ இவளோ யோசிக்கிற நீங்க ஆட்சி க்கு வந்ததும். மே,ஜூன் மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டியது தானே? இப்போ TRB exam vera வருது அதுக்கு போஸ்டிங் போட்டுடீங்கனா இருக்குற vacant place full aaidum, appo நாங்க yepdi எங்க near place ku போக முடியும் sir? கொஞ்சம் yosinga. மொதல்ல எங்களுக்கு transfer counselling நடத்துங்க long la இருந்து வர teachers ku கொஞ்சம் consider பண்ணுங்க சார். ஆட்சி தான் மாறி இருக்கு ,சிந்தனை மாறவில்லை என்று யாரும் யோசிக்க வாய்ப்பு தர வேண்டாம், நன்றி

  ReplyDelete
 9. 2013 lusunga irukura varaikum yaarukume posting kedaikaathuuu....

  ReplyDelete
  Replies
  1. Dai loosu paya, 2013 unaku oomba kudukalaya? Un velaya paruda.

   Delete
 10. ஆசிரியர் சங்கங்கள் இது போன்ற விஷயங்களை அமைச்சரிடம் எடுத்து சொல்லி பேசினால் நல்லதே நடக்கும்,TRB posting ku முன்னாடியே counselling நடத்த வேண்டும்...sir

  ReplyDelete
 11. மொதல்ல corona nu காரணம் சொல்லிட்டாங்க....
  அப்புறம் Election nu காரணம் சொன்னிங்க....
  இப்போ அடுத்த ஆண்டு nnu சொல்றீங்க...
  என் இப்படி மாத்தி மாத்தி பேசுறீங்க?
  மொதல்ல Teachers ku Transfer counselling நடத்துங்க...sir
  அப்ரமா TRB போஸ்டிங் போடுங்க...
  அதான் correct sir.
  Transfer
  Counselling kaaga romba வருஷமா வெயிட் pannitrukkom. Pls.

  ReplyDelete
 12. 19457 உபரி ஆசிரியர்கள் உள்ளனர்

  ReplyDelete
  Replies
  1. Yaruya sonnathu unakku theva illatha rumours a spread pannatha

   Delete
 13. போன மாசம் வரை 950 ஸ்கூல் ல ஹெட் மாஸ்டர் இல்ல அதனால் கற்றல் கற்பித்தல் பணி பின்னடைவு எனவே விரைவில் கலந்தாய்வுன்னு ஒரு உருட்டு
  இந்த மாசம் பரீட்சை வருது எனவே கற்றல் கற்பித்தல் பணிக்காக அடுத்த வருடம் கலந்தாய்வுன்னு ஒரு உருட்டு
  அடுத்த வருடம் tet போஸ்டிங் போட்டாச்சு
  காலி பணியிடம் இல்லை அப்டினு ஒரு உருட்டு

  நல்ல உருட்டுருங்கயா

  ReplyDelete
 14. அதாவது தேர்தல் வருது
  இந்த நேரத்துல கலந்தாய்வு நடத்திமுடிச்சா
  தேர்தல் பணிக்கு
  இந்த ஆடுங்க கூட்டத்தை சேர்க்கிறது கஷ்டம் அதுனால இப்போ கவுன்சிலிங் நடத்த முடியாது
  அப்டினு வெளிப்படையா செய்தியை போடுங்கய்யா
  அதைவிட்டு எக்ஸாம் வருது மழை பேயுதுனு மொக்க காரணம் சொல்லிக்கிட்டு

  ReplyDelete
 15. இது குறித்து அமைச்சர் பதில் இப்டி தான் இருக்கும்
  இந்த செய்தி அதிகாரபூர்வ தகவல் இல்லை
  கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயார் செய்வதற்கான ஆலோசனை நடைபெற்று கொண்டிருக்கிறது
  முதல்வர் ஒப்புதல் கிடைத்தவுடன் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் அதற்கடுத்து கலந்தாய்வு நடத்தப்படும்
  விரைவில் நடத்தப்படும்
  படும்..

  ReplyDelete
 16. உடனடியாக நடத்த வேண்டும்.ஆசிரியர்களை அனைத்து வித்த்இலும் ஏமாற்றுகிறீர்கள்.

  ReplyDelete
 17. Teachers Transfer counselling உடனடியாக நடத்துங்க

  ReplyDelete
 18. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் காரணம் சொல்லி கலந்தாய்வு தள்ளி வைப்பார்கள்

  ReplyDelete
 19. இதுக்கு செங்கோட்டை பரவால்ல

  ReplyDelete
 20. May,June month la ye counselling நடத்தி இருக்கணும்,இது வே late...இதுல இன்னும் தள்ளி போட்டா yepdi? கற்றல் கற்பித்தல் பணிகளில் எந்த பாதிப்பும் வராது...because இப்போதைக்கு refreshment course dhan poitrukku....idha oru காரணமாக சொல்லிக்கிட்டு இருகாதிங்க, கவுன்சிலிங் நடத்துங்க sir.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி