அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல்: கவுன்சிலிங் நடத்த விபரங்கள் சேகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2021

அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல்: கவுன்சிலிங் நடத்த விபரங்கள் சேகரிப்பு

 

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்துவதற்காக, காலிப்பணியிட விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

தமிழகத்தில், 140க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல்கட்டமாக, அரசு கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க, கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


கல்லூரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு 2021-22 ம் ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்த அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டியுள்ளது. இதற்காக கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிட விபரங்களை சரிபார்த்து, படிவங்களை பூர்த்தி செய்து, கல்லூரி கல்வி இயக்ககத்துக்கு நேரில் வந்து அலுவலக பதிவுகளை சரிபார்த்து செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி