உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2021

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

 

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு எம்.பில், எம்.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். 


நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம்


மேலாண்மை : மத்திய அரசு 


பணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல் 


பணி : Assistant Professor 


தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Aricultural Engineering, Farm Machinery பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம், M.Phil, M.Tech, Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2 முதல் 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ruraluniv.ac.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். 


நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி :  29.11.2021 நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம் : காலை 10.30 மணியளவில் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Board Room, Administrative Block. 


மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ruraluniv.ac.in/ அல்லது https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/walk_in171121.pdf  என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

2 comments:

  1. Polytechnic trb exam எழுதும் நண்பர்கள் கவனத்திற்கு.. ஒரு நிமிடம் இதை முழுவதும் படிக்கவும்.. ஏற்கனவே பல நெருக்கடிகளை கடந்து வந்து விட்டோம்.. தற்போது கனமழை பெரும்பாலான மாவட்டங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. ஆண்டு முழுவதும் போட்டி தேர்வுக்கு படித்து இருந்தாலும், தேர்வு நடைபெறும் இறுதி சூழல் தான் தேர்ச்சியை நிர்ணயிக்கும்..

    கல்லூரி செமஸ்டர் தேர்வு ஜனவரி 20 க்கு பிறகு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..

    ஐனவரி முதல் வாரத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற்றால் தான் அனைவருக்கும் நன்று..

    இது சாத்தியமா ? என்று கேட்டால்.. 100% சாத்தியம்.. தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.. நமது வேண்டுகோள் அதை மாற்றி புரட்சி செய்தது.. அது போல மீண்டும் ஒரு முயற்சி.. கடிதம்..
    ஆம் .. நண்பர்களே.. நாம் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்புவோம்.... 5நிமிடம் போதும் .. நம் வாழ்க்கையே மாற்றும்..

    அல்லது

    தொலைபேசியில் தெரிவிக்கலாம்.. இமெயில் கூட அனுப்பலாம்..

    ஆனால் ஒரு முறையாவது முயற்சி செய்யுங்கள்..

    தேர்வுக்கு படிப்பவர்கள் தாராளமாக படியுங்கள்.. 40 நாட்கள் கிடைத்தால் உங்கள் மதிப்பெண் எவ்வளவு உயரும் என்பதை ஒரு நொடி நினைத்து பாருங்கள்.. நன்றி வணக்கம்... 🙏
    Teachers recruitment board,
    College Rd, Near Sankara Nethralaya(Main), Subba Road Avenue, Nungambakkam, Chennai Tamil Nadu 600006

    04428272455
    9444630068, 9444630028

    Email: trb.tn@nic.in

    ReplyDelete
  2. அமுதசுரபி பயிற்சி மையம் - தருமபுரி
    PG TRB - தமிழ் & Education
    New Batch starts on 05/12/2021
    Near 4 Road circle, Aavin opp
    Dharmapuri
    Contact - 9344035171

    Tamil materials - 2000 pages
    Education materials - 400 pages

    Test Batch also going on
    1.Content test
    2.unit test
    3.category test
    4.Spilt test
    5.whole test

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி