தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் நிர்வாகப் பணிச் சுமையை தவிர்த்திடுக: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - kalviseithi

Nov 29, 2021

தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் நிர்வாகப் பணிச் சுமையை தவிர்த்திடுக: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

 

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கற்றல் கற்பித்தல் பணியை விட நிர்வாகப் பணிகளில் அதிகமாக ஈடுபடுத்துவதை பள்ளிக் கல்வித்துறை தவிர்க்க வேண்டுமென தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


இது குறித்து அதன் பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி, முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


கரோனா பாதிப்புக் காரணமாக 18 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுழற்சி முறையில் பள்ளிகள் நடைபெற்று வரும் சூழலில் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி தவிர்த்து எமிஸ் இணையதளத்தில் ஆசிரியர் வருகைப்பதிவு மற்றும் மாணவர் வருகைப் பதிவை பதிவேற்றம் செய்வதால் தினமும் காலை 10.30 மணிவரை நேரத்தை இதற்காக செலவிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.


இணைய இணைப்பு சரியாக செயல்படாத கிராமங்களில் எமிஸ் பதிவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனால் கல்வி அதிகாரிகள் குறித்த நேரத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்றால் விளக்கம் கேட்கின்றனர்.


இன்டர்நெட் வசதி இல்லாத கிராமப்புறப் பகுதியில் ஆசிரியர், மாணவர்கள் வருகைப் பதிவு மேற்கொள்வதில் இடர்பாடுகள் ஏற்படுகிறது. குறிப்பாக அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இந்த பிரச்சனை அதிகம் உள்ளது.


ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணியை விட நிர்வாகப் பணிக்காக அதிகளவு நேரத்தையும் உடல் உழைப்பையும் செலவிட வேண்டியுள்ளது.


ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளைத் தவிர்த்து மற்ற பணிகளை ஆசிரியர் தலைமேல் சுமத்துவதால் மன உளைச்சலை ஏற்படுத்தி கற்றல் கற்பித்தல் பணி தடைப்பட்டுவதை தவிர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களை தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் வலிறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.


இவ்வாறு பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி அனுப்பிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.4 comments:

 1. Polytechnic trb exam எழுதும் நண்பர்கள் கவனத்திற்கு..ஒரு நிமிடம் இதை முழுவதும் படிக்கவும்.. ஏற்கனவே பல நெருக்கடிகளை கடந்து வந்து விட்டோம்.. தற்போது கனமழை பெரும்பாலான மாவட்டங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. ஆண்டு முழுவதும் போட்டி தேர்வுக்கு படித்து இருந்தாலும், தேர்வு நடைபெறும் இறுதி சூழல் தான் தேர்ச்சியை நிர்ணயிக்கும்..

  கல்லூரி செமஸ்டர் தேர்வு ஜனவரி 20 க்கு பிறகு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..

  ஐனவரி முதல் வாரத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற்றால் தான் அனைவருக்கும் நன்று..

  இது சாத்தியமா ? என்று கேட்டால்.. 100% சாத்தியம்.. தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.. நமது வேண்டுகோள் அதை மாற்றி புரட்சி செய்தது.. அது போல மீண்டும் ஒரு முயற்சி.. கடிதம்..
  ஆம் .. நண்பர்களே. நாம் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்புவோம்.... 5நிமிடம் போதும் .. நம் வாழ்க்கையே மாற்றும்..

  அல்லது

  தொலைபேசியில் தெரிவிக்கலாம்.. இமெயில் கூட அனுப்பலாம்..

  ஆனால் ஒரு முறையாவது முயற்சி செய்யுங்கள்..

  தேர்வுக்கு படிப்பவர்கள் தாராளமாக படியுங்கள்.. 40 நாட்கள் கிடைத்தால் உங்கள் மதிப்பெண் எவ்வளவு உயரும் என்பதை ஒரு நொடி நினைத்து பாருங்கள்.. நன்றி வணக்கம்... 🙏
  Teachers recruitment board,
  College Rd, Near Sankara Nethralaya(Main), Subba Road Avenue, Nungambakkam, Chennai Tamil Nadu 600006

  04428272455
  9444630068, 9444630028

  Email: trb.tn@nic.in

  ReplyDelete
 2. POLYTECHNIC trb friends....heavy rain
  Cm cell ku request Pana kandipa post pone panvangaaa

  ReplyDelete
 3. Don't waste your time sir. Poly exam sure a nadakum dec 8 to dec12. I asked TRB

  ReplyDelete
  Replies
  1. யாருக்கிட்ட கேட்டீங்க chairperson லதா விடமா...??

   அவர்களுக்கே exam எப்போ நடக்கும்னு தெரியாது.. இதுல helpline ல சொல்றதெல்லாம் நம்பிக்கிட்டு இருக்கீங்க

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி