பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது சார்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2021

பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது சார்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் உத்தரவு.

 

பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது சார்ந்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அனுப்பிய செயல்முறைகள் :


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்க விழைகின்றேன். 


அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்போது கழிவறைகள் மாணவ / மாணவிகளுக்கு தனித்தனியாக அளிக்கப்பட்டு வருகின்றன . மேலும் கூடுதல் தேவைப்படின் SSA , RMSA , தொண்டு நிறுவனம் , CSR நிதி , சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிதி மூலம் கட்டப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் கொண்டுவரப்படுகின்றன . ஊரக பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் உள்ள கழிவறைகளை தூய்மையாக பேணுதல் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணை நிலை எண் 181 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ( மஅதி , 1 ) துறை நாள் 30.11.2015 மூலம் ஆணையிடப்பட்டது.


மேலும் நகராட்சி மற்றும் மாநகராட்சியில் அமைந்துள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் உள்ள கழிவறைகளை தூய்மையாக பேணுதல் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணை நிலை எண் 166 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் ( MA.IV ) துறை நாள் 23.11.2016 மூலம் ஆணையிடப்பட்டது.


அதன்படி அனைத்து பள்ளிகளில் உள்ள கழிவறைகளை பராமரிப்பு சார்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் சில பள்ளிகளில் இன்று வரை தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது என தெரியவருகிறது. எனவே , இதன் சார்பாக தொடர் நடவடிக்ககையின் பொருட்டு இத்துடன் இணைத்தனுப்பும் Excel படிவத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் அமைந்துள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் சார்பான விபரம் தனியாகவும் , அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் விவரம் தனித்தனியாக 10.11.2021 - க்குள் இவ்வாணையரகத்திற்கு Email மூலம் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


School Cleaning Work - DSE Proceedings - Download here...





2 comments:

  1. தூய்மை பணியாளர்கள் இல்லையெனில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் என்ன செய்வது.
    தகுந்த நியமனங்கள் தேவை.

    ReplyDelete
  2. ST.XAVIER'S ACADEMY,
    NAGERCOIL, CELL:8012381919
    PGTRB2021 class starts on: 04-11-2021.
    நடைபெறும் பாடங்கள்..
    ENGLISH
    MATHEMATICS
    BOTANY
    And
    COMPUTER SCIENCE
    Study materials also available.!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி