அகில இந்திய தொழில் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு - kalviseithi

Nov 20, 2021

அகில இந்திய தொழில் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு

 தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:


அகில இந்திய தொழிற் தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், தனித்தேர்வர்களாக தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் தொழிற்பயிற்சி நிலையத்திலுள்ள தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.முதல் பிரிவு, மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு டிசம்பர் 14ம் தேதி கருத்தியல் தேர்வும், 15ம் தேதி செய்முறை தேர்வும் சென்னை கிண்டி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செயல்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.இதில், தேர்ச்சி பெறுபவர்கள் மற்றும் இரண்டாம் பிரிவு விண்ணப்பதாரர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள அகில இந்திய தொழிற் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதுதொடர்பான விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை வரும் 22ம் தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி