தகுதிகாண் பருவம் நிறைவு செய்யாதவர்கள் எடுக்கும் மகப்பேறு விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிக்கப்படுமா? - RTI Letter - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2021

தகுதிகாண் பருவம் நிறைவு செய்யாதவர்கள் எடுக்கும் மகப்பேறு விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிக்கப்படுமா? - RTI Letter

தகுதிகாண் பருவம் நிறைவு செய்யாதவர்கள்  எடுக்கும் மகப்பேறு விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிக்க கூடாது !!!. மேலும் சம்பளம் இதரபடிகள் உண்டு !


தகவல் அறியும் உரிமைச் சட்டம் , 2005 - ன் பிரிவு 2 ( 0 ) மற்றும் 2 ( 0 ) ன் கீழ் விளக்கங்களோ , தெளிவுரைகளோ மற்றும் கேள்விகளுக்கு பதிலோ வழங்கிட வழிவகை செய்யப்படவில்லை . இருப்பினும் , தாங்கள் தகவல் எண் .3 முதல் 8 வரை கோரியுள்ள மகப்பேறு விடுப்பு குறித்த பொருண்மை தொடர்பாக அடிப்படை விதி 101 ( a ) - ன் கீழ் உள்ள நெறிமுறைகளில் ( Instructions ) - க்கு அரசாணை ( நிலை ) எண் .91 , பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த ( அ.வி.ஐ ) , துறை , நாள் 28.07.2020 - ல் வெளியிடப்பட்ட திருத்தத்தின்படி தகுதிகாண் பருவத்தினர் அரசுப் பணியில் சேர்ந்த நாளுக்கு மறு நாள் முதல் மகப்பேறுவிடுப்பு எடுக்க இயலும். 


மேலும் அவ்வாறு தகுதிகாண் பருவம் நிறைவு செய்யாத ஒரு அரசு ஊழியர் மகப்பேறு விடுப்பு எடுக்கும் பட்சத்தில் அவரது ஈட்டிய விடுப்பு கணக்கிலுள்ள ஈட்டிய விடுப்பினை கழிக்க வேண்டிய அவசியமில்லை.


மேலும் , மகப்பேறு விடுப்பில் இருக்கும்போது மாத மாதம் ஊதியம் மற்றும் இதர படிகள் பெற்று வழங்க வேண்டும்.


மேலும் , இது குறித்த தகவல்கள் அடிப்படை விதிகளில் விதி 101 ( a ) ன் கீழ் உள்ள நெறிமுறைகளில்  ( Instructions ) மற்றும் அரசாணை ( நிலை ) எண் . 91 , பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த ( அவி . II ) த்துறை , நாள் . 28.07.2020 - ல் உள்ளது . இதனை தாங்கள் தமிழ்நாடு அரசு வலைதளத்தில் ( www.tn.gov.in/rules/dept/22 )- ல் காணலாம் .

1 comment:

  1. தகுதிகாண் பருவத்தில் ஈட்டிய விடுமுறை எடுக்க முடியுமா? தயவு செய்து பதில் கூறவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி