10 ஆண்டுகளாகப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்குப் பணி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2021

10 ஆண்டுகளாகப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்குப் பணி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

 

அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாகப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்குப் பணி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தஞ்சாவூரில் நடந்த மகளிர் சுய உதவிக் குழு நலத்திட்டத்தில் இன்று பங்கேற்றார். அவரிடம் பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் நியமனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலளிக்கும்போது, “முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்குப் பணி வழங்கிட சான்றுகள் சரிபார்க்கப்பட்ட நிலையில், அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அவர்களுக்குப் பணி வழங்காமல் நிறுத்தி வைத்துவிட்டனர். நிச்சயம் இந்த விவகாரம் முதல்வர் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். பணி வழங்குவது குறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சுமார் 2,774 தமிழாசிரியர் பட்டதாரிகளுக்குத் தற்காலிகப் பணி நியமனம் வழங்க வேண்டும் என அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

9 comments:

  1. 2013 ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்று சரி பார்க்கப்பட்ட அனைவருக்கும் பணி வழங்குவது தான் சரியான சமூக நீதியாகும்

    ReplyDelete
  2. Adapaavigala poisolla alave illiya
    2774 pg pta temporary posts.😅

    ReplyDelete
  3. 20 காலிப்பணியிடங்கள் 1:5 அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு அழைத்து அதில் முன்னுரிமை அடிப்படையில் 20 பேருக்கு ஆசிரியர் பணி நியமனம் செய்து உள்ளார்கள் மீண்டும் 50 காலி பணியிடங்களுக்கு மீதம் உள்ள 80 பேரில் 50 பேருக்கு பணி நியமனம் செய்கிறார்கள் அடுத்து மீண்டும் 25 காலி பணியிடங்களுக்கு 25 காத்து இருக்கும் 2t பேருக்கு பணி நியமன செய்யும் நேரத்தில் தேர்தல் தேதி அறிவித்து விட்டார்கள் அதிமுக ஆட்சிக்கு வந்தது 25 பேருக்கு வேலை கொடுக்க முடியாது இது கலைஞர் கொள்கை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்று கூறினால் எப்படி? 100 பேரில் 75 பேருக்கு வேலை கொடுத்து விட்டு மீதம் உள்ள 25 பேருக்கு நீ தேர்வு எழுதினால் தான் வேலை என்று கூறினால் எப்படி? நீதிமன்றம் 25 பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்தும் பணி நியமனம் செய்யவில்லை தற்போது திமுக ஆட் ஹின்வந்து உள்ளது அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன் நிச்சயம் தீர்வு கிடைக்கும்

    ReplyDelete
  4. Muthalvar kavanathuku yeduthu sella yethanai aandukal aagumnu solidunga sir

    ReplyDelete
  5. Chitthan. Sir ten years no teacher appointment only senkottaiyan sir inrupoi naalai naalai enru neenkalum vanthuvitirkal

    ReplyDelete
  6. 2007-ல் மூலமாக பட்டதாரி ஆசிரியராக தொடக்க கல்வி துறையில் பணியமர்த்தப்பட்டேன். பின் 2017-ல் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் நானூம் ஈர்த்தது கொள்ளப்பட்டேன். இங்கு நான் இளையவராக உள்ளேன். என் 10 வருட பணிக்காலம் வீணாகிறது.என் பணிமூப்பு என்னனூடைய பணி வரன்முறை தேதியை எடுத்து கொண்டு என்னை போன்ற 15000 ஆசிரியர்களின் கண்ணீர் துடைப்பார்களா. முந்தைய அதிமுக அரசு எங்களுக்கு பணி விதிமுறைகள் வகுக்கபடாதது தான் இந்த குறைக்கு முக்கிய காரணம். ஐயா மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் இதை தீர்த்துவைப்பாரா.

    ReplyDelete
  7. Tet pass பண்ணி Cv முடித்தவர்கள் என்ன செய்வார்கள். தகுதியானவர்களை நியமிக்கவேண்டியது அரசின் கடமை.Tet முடித்தவர்களுக்கு ஒரு விடிவுகாலம் வரவேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி