ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் சர்க்கிள் அடிப்படையிலான அதிகாரி பதவிகளுக்கான பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அகமதாபாத், பெங்களூரு, போபால், சென்னை, ஜெய்ப்பூர் போன்ற சர்க்கிள்களில் மொத்தம் 1,226 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சென்னை சர்க்கிளில் மட்டும் 276 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவும், வணிக வங்கி அல்லது ஏதேனும் ஒரு பிராந்திய கிராமப்புற வங்கியில் அதிகாரியாக 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
1-12-2021 அன்றைய தேதிப்படி 30 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். விதிமுறைகளின் படி பிரிவு வாரியாக வயது தளர்வு உண்டு. உள்ளுர் மொழி தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-12-2021. மேலும் விரிவான விவரங்களுக்கு https://sbi.co.in/web/careers என்ற இணைய பக்கத்தை சொடுக்கவும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி