2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை - பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி - ஜனவரி 8 விண்ணப்பிக்க கடைசி நாள் - kalviseithi

Dec 14, 2021

2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை - பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி - ஜனவரி 8 விண்ணப்பிக்க கடைசி நாள்

 

பாரதியார் பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியை, கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். 


கவர்னர் மாளிகை அறிக்கை:


பாரதியாரின் 139வது பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, மாநில அளவிலான கட்டுரை போட்டி நடத்த, கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.தெளிவான முகவரி பள்ளி மாணவர்கள் 'இந்திய விடுதலை போரில் மகாகவி பாரதியாரின் பங்கு' என்ற தலைப்பில், 2,000 முதல் 2,500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.


தமிழில் எழுதும் மாணவர்கள், mahakavibharatisch 2021tamil@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கும்; ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள், mahakavibharatisch 2021eng@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்கள் 'பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்' என்ற தலைப்பில், 3,500 முதல் 4,000 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். தமிழில் எழுதும் மாணவர்கள், mahakavibharaticol 2021tamil@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கும், ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள் mahakavi bharaticol2021engl@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.


கட்டுரைகள், ஜனவரி 8 மாலை 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதில், மாணவர்கள் தங்கள்பெயர், வீட்டின் முகவரி, கல்வி நிறுவனம், மொபைல் போன் எண் ஆகிய விபரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.முதல் பரிசு 2 லட்சம் கட்டுரைகளை தேர்வு செய்ய, செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் சந்திரன், தமிழ்நாடு மருத்துவ பல்கலை துணைவேந்தர்சுதா சேஷையன் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


மொத்தம் நான்கு பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி அளவிலான போட்டியில், முதல் பரிசு பெறுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ்; கல்லுாரி அளவிலான போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ், ஜனவரி 26ல், ராஜ்பவனில் நடக்கும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி