ADW - ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு சென்னையில் இன்று நடைபெறுகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2021

ADW - ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு சென்னையில் இன்று நடைபெறுகிறது

ஆதிதிராவிடர் நலத் துறையின்கீழ் 1,138 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 83,259 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 5 ஆண்டுகளாக கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இதன்காரணமாக ஆசிரியர் -மாணவர் விகிதாச்சாரம் அதிகரித்தது.


இதனால், விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள ஆசிரியர் அல்லது காப்பாளர் பணியிடங்களில் பணிநிரவல் மூலம் நிரப்ப ஆதிதிராவிடர் நல ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உபரி மற்றும் காலி பணியிடங்களின் விவரங்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமாகச் சேகரிக்கப்பட்டன.


இந்நிலையில், மாவட்ட வாரியாக உள்ள உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆணையரகத்தில் இன்று (டிச. 8) காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இயங்கும் நலப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குக் காலை 10 மணி முதலும், மதுரை உள்ளிட்ட 9 மாவட்ட ஆசிரியர்களுக்கு மதியம் 2.30 மணி முதலும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.


1 comment:

  1. இதேபோல அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நடத்தவேண்டும்..உபரியாக பல ஆசிரியர்கள் உள்ளனர்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி