அரசு பள்ளியில் பாடம் நடத்திய கலெக்டர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2021

அரசு பள்ளியில் பாடம் நடத்திய கலெக்டர்

 

காஞ்சிபுரம் அடுத்த பெரியநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கலெக்டர் ஆர்த்தி, மாணவர்களுக்கு ஆங்கில இலக்கண பாடம் நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்டம் காலூர் ஊராட்சி பெரிய நத்தம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் ஆர்த்தி முகாமை தொடங்கி வைத்து, சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பெரிய நத்தம் அரசு ஆரம்ப பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியை கலெக்டர் ஆய்வு செய்தார். அங்கு ஆசிரியர்களிடம், பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில இலக்கண பாடம் நடத்தினார்.


பின்னர் அவர், பள்ளி மாணவ, மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி, பாடங்கள் எளிமையாக புரிகிறதா, கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு பள்ளிக்கு வருவதால் மனநிலை எப்படி உள்ளது என கேட்டறிந்தார். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் 4 மணிவரை அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வகுப்புகள் நடத்தி அவர்களது மனநிலை மேம்படும் வகையில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என கூறினார். கலெக்டர் ஆர்த்தி திடீரென மாணவர்களுக்கு வகுப்பு நடத்தியது, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

9 comments:

  1. ஆசிரியர் பணிக்கு படித்தவர்களை தவிர எல்லோருமே பள்ளிக்கு சென்று பாடம் நடத்துங்கள்.... கால கொடுமை...

    ReplyDelete
  2. கலெக்டர் வேலை பார்த்த ஆசிரியர் ... Oththukolvargala???? Publicity news

    ReplyDelete
  3. இதுபோல் வேறு துறைகளில் பணியாற்றும் நபர் ஆசிரியர் பணியை மேற்கொள்ளலாமா என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்க போகிறேன்.... அது என்ன ஆசிரியர் தொழில் மட்டும் அவ்வளவு ஏளனம் போல... Idiots...

    ReplyDelete
  4. Collector entha university la teacher training mudichar?

    ReplyDelete
    Replies
    1. முதல்ல டெட் பாஸான்னு கேளுங்க....
      2013? 2012?! 2017?! 2019?!

      Delete
  5. அன்பில் மகேஷ்யும் பாடம் நடத்த சொல்லுங்க

    ReplyDelete
  6. Vao office egapatta perukku Patta kodukkala atha poi parungamma

    ReplyDelete
  7. அதெல்லாம் ok... பசங்க ஏன் நிக்கிராங்க... உக்காரலாமே..... கலாக்டர் அப்படினா நின்னுட்டு இருக்கணுமா மத்தவங்க ... இது மனித உரிமை மீறல்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி