உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - kalviseithi

Dec 18, 2021

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

பத்திரிக்கைச் செய்தி 

பொது ( பல்வகை ) துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண் . 154 பொது ( பல்வகை ) த் துறை 
நாள் : 03.09.2020 - ன்படி , 

இராமநாதபுரம் மாவட்டம் , கிழக்கரை , வட்டம் , திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 20.12.2021 அன்று திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் " உள்ளூர் விடுமுறை " ஆகவும் , அதனை ஈடு செய்யும் பொருட்டு 08.01-2022 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது . 

மேலும் இராபநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 08.01.2022 அன்று வழக்கம்போல் இயங்கும் . இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881 - ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் , 20.12.2021 திங்கள்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம் , சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவிக்கப்படுகிறது . 

17/12/2021 ஆட்சியர் , இராமநாதபுரம் .1 comment:

  1. மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு லீவு உண்டா அல்லது இல்லை யா என சொன்னால் நல்ல இருக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி