குழப்பமாக இருக்குது கவுன்சலிங் - தவிக்கும் தலைமை ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2021

குழப்பமாக இருக்குது கவுன்சலிங் - தவிக்கும் தலைமை ஆசிரியர்கள்

 

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (டிஇஓ) ஓரிரு மாதங்களுக்கு முன் பூஜ்ய கவுன்சலிங் நடந்தது. அதாவது, சீனியாரிட்டி அடிப்ப டையில் இந்த கவுன்சலிங் நடத் தப்பட்டது. விரைவில் ஆசிரியர் களுக்கும் கவுன்சலிங் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி "தங்க ளுக்கு பூஜ்ய கவுன்சலிங் வேண் டாம். விருப்ப மாறுதல் கவுன்ச லிங் நடத்த வேண்டும்' என பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் நந்தகுமாரிடம் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத் தனர். ஆனால், பள்ளிக்கல்வித் துறை கமிஷனரோ, 'ஆசிரியர்க ளுக்கு பூஜ்ஜிய கவுன்சலிங் நடத்தும் திட்டமில்லை' தெளிவுப்படுத்தினார்.


இந்நிலையில் விரைவில், உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் நடைபெற்று, அதன்பிறகு ஆசி ரியர்களுக்கான கவுன்சலிங் நடக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள 3 ஆயிரத்துக்கும் அதிகமான மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் களுக்கான இடமாறுதல் கவுன்சலிங் நடத்துவதற் கான பணிகளை பள் ளிக்கல்வித்துறை தீவி ரப்படுத்தி உள்ளது. தலைமையாசிரியர்க ளின் முன்னுரிமை பட்டியல்களை பள் ளிக்கல்வித்துறை தயார் செய்துள்ளது. இதனால், விருப்ப மாறுதல்படி கவுன்சலிங் நடக்குமா அல்லது பூஜ்ய கவுன்சலிங்படி நடத்தப்படுமா என மேல்நிலைப்பள்ளி தலை மையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து மேல்நி லைப்பள்ளி தலைமையாசிரியர் கள் கூறியது: மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கவுன்சலிங் தகவல்கள் சேகரிக் கப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறை சேகரிக்கும் விவ ரங்கள், பூஜ்ய கவுன்சலிங் நடத்துவதற்கான நடவடிக்கை போல் உள்ளது. ஆனால், அதி காரிகள் தரப்பில் விருப்பமாறுதல் கவுன்சலிங்படியே நடக்க ஏற்பா டுகள் நடப்பதாக கூறுகின்றனர். இதனால், எங்களுக்கு குழப்பம் நீடிக்கிறது.


ஏற்கனவே, 950க்கும் அதிகமான தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள் ளன. அந்த காலிப்பணியிடங் களை பதவி உயர்வு மூலம் நிரப்பி விட்டு, இடமாறுதல் கவுன்சலிங் நடத்த வேண்டும். கோர்ட் வழக்குகள் ஆகியவற்றை விரைவில் முடித்துவிட்டு, தலைமையாசிரியர் பதவி உயர்வு, மேல்நிலை தலைமையாசிரியர்க ளுக்கு விருப்ப மாறுதல் கவுன்சலிங் நடத்த வேண்டும். விரை வில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட வேண்டும்" என் கிறார்கள் அவர் கள்.

1 comment:

  1. No tension,no councilling no posting, it s our policy, you selected us what purpose ? I don't know anything, I am part 2 sengottian

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி