அரசு, தனியார் நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்துங்கள்; தமிழக அரசு அரசாணை வெளியீடு.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2021

அரசு, தனியார் நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்துங்கள்; தமிழக அரசு அரசாணை வெளியீடு.!

 

அரசு, தனியார் நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆலைகள், கல்விநிறுவனங்கள் போன்றவற்றில் நடைபெறும் விழாக்களிலும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கலைகளை பாதுகாத்திடவும், கலைஞர்களின் வாழ்வினைச் செம்மைப்படுத்திடவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


நாட்டுப்புற கலைகளை அரசு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு விழாக்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்தும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க ஆணையிட்டு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் நடைபெறும் விழாக்களிலும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்த ஆணையிட்டுள்ளது.

நாட்டுப்புற கலைகளை அரசு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள தொழில் மற்றும் வணிக வரித்துறை ஆணையகம், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. நாட்டுப்புற கலைகளை பாதுகாத்திடவும், கலைஞர்களின் வாழ்வினை செம்மைப்படுத்திடவும், கலைகளை மக்களிடம் பரப்பி அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்லும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி