அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2021

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

 

காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது.


பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 6,177 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 950க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பதவிக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் க.நந்தக்குமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


புகார்களில் சிக்கி ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான ஆசிரியர்களை பரிந்துரைக்கக் கூடாது என்றும், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்டக் கல்வி அதிகாரி அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டும் விருப்பக் கடிதம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. பொதுமாறுதல் கவுன்சிலிங் தள்ளிப் போடவே முயற்சி செய்வர்.. பதவி உயர்வு கொடுத்தால் சம்பளம் உயர்த்த வேண்டும். எனவே, எவ்வளவு காலம் கடத்த முடியுமோ அவ்வளவும் செய்வார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி