பள்ளி நூலகங்களை முறையாக பயன்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2021

பள்ளி நூலகங்களை முறையாக பயன்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

நூலகங்கள் மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் பெருக்கும் பேராதாரமாகும். நாடு போற்றும் பெரிய தலைவர்கள் பாட நூல்களுக்கு அப்பால் தங்கள் பள்ளிகளில் உள்ள இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள நூலகங்களைச் சிறந்த முறையில் தொடர்ந்து பயன்படுத்தி உருவானவர்களாவர்.

 மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் பல்லாண்டு காலமாக நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன , ஒவ்வொரு வகுப்புக்கும் நூலகப் பாடவேளை வாரமொருமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


 பெரும்பாலான பள்ளிகள் சிறப்பான முறையில் இப்பாட வேளையை செயல்படுத்தி வருகின்றன . எனினும் , சில இடங்களில் நூலகப் பாட வேளை மற்றும் பள்ளி நூலகங்களின் பயன் முறையாக மாணவர்களைச் சென்றடையாமல் இருப்பது தெரியவருகிறது. எனவே , பள்ளி நூலகங்களையும் பாட வேளைகளையும் முறையாகப் பயன்படுத்தவும் , அவற்றின் பயன் மாணவர்களை நன்கு சென்றடையவும் பாடநூல்களுக்கு வெளியே புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல் முறையாக மாணவர்கள் கைகொள்வதை இலக்காகக் கொண்டு செயல்படவும் பார்வையில் கண்ட அரசுக் கடிதத்தில் அறிவுறுத்தியவாறு பின் வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.


DSE - Library Proceedings - Download here...


2 comments:

 1. மதிப்பிற்குரிய திரு.தளபதி அவர்களுக்கு வணக்கம்.

  மேல்நிலை (ம) உயர்நிலை பள்ளிகளில் உள்ள நூலகங்களில் நூலகர் பணியிடத்தை நிரப்பினால் பள்ளிக்குழந்தைகளின் கல்வித்தரம் உயர்வதோடு வேலையின்றி வறுமையில் வாடும் MLIS,BLISS,CLIS படித்த இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
  ------------------------------------
  ---------நன்றி ---------------------

  ReplyDelete
 2. Ur concentrating all the areas except 2013 batch teachers appointment 😭😭😭

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி