சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் மற்றும் நிவாரணம் - முதல்வர் அறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2021

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் மற்றும் நிவாரணம் - முதல்வர் அறிக்கை!

 

திருநெல்வேலி மாவட்டம் , திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் , சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.


இந்நிலையில் , இப்பள்ளியில் இன்று காலை 10.50 மணியளவில் பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் , இடிபாடுகளில் சிக்கிய விஸ்வரஞ்சன் , கே அன்பழகன் மற்றும் ஆர் . கதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் . மேலும் எம் . இசக்கி பிரகாஷ் , எஸ்.சஞ்சய் , ஷேக்கு அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்தத் துயர சம்பவத்தை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் , மிகவும் வேதனையுற்று உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு , உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா பத்து இலட்சம் ரூபாயும் , காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.



4 comments:

  1. Tirunelveli CSI diocesan government aided school

    ReplyDelete
  2. CM sir ivanga mela action edunga lakhs kanakula paisa vangee teachers apt pandranga rich people only working this school , government salary evanga Paisa vangee appointment pottu drinks,court case nu allairunga kastapatavangaluku seniority illa .Ida government under la kondu vanga tet,trb appointment podunga ,inda death Ku Karanam yaro
    neenga kadavulku Patil solanum Da

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி