ஆசிரியர்கள் கவுன்சிலிங் : இன்று முதல் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 31, 2021

ஆசிரியர்கள் கவுன்சிலிங் : இன்று முதல் விண்ணப்பம்

 

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாறுதல் பெற விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை தொடக்கப்பள்ளி, பள்ளிக்கல்வி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்வி மேலாண்மை தகவல் முகமை இணையத்தில், இன்று முதல் ஜன.,7 வரை பதிவேற்றம் செய்யலாம்.இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட, அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்களின், முன்னுரிமை பட்டியல், வரும் 10ம் தேதி வெளியிடப்படும். 

பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் இருந்தால், மறுநாள் அப்பணி மேற்கொள்ளப்படும். மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் ஜன., 13ல் வெளியிடப்படும். வரும், 19ம் தேதி முதல் கவுன்சிலிங் துவங்கி, பிப்.,18 வரை நடக்கும் என, பள்ளிக்கல்வித்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது.

1 comment:

  1. 2013tet தேர்வர்கள் மீண்டும் போஸ்டிங் போடுவதை தடுப்பதற்காக காலம் தாழ்த்தி செல்வதற்காக வெயிட்டேஜ் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்கு முதலில் வேலை போடுங்கள் என்று ஒரு பொட்டச்சி ஆடியோ போட்டுருக்கா தயவு கூர்ந்து யாரும் அவளை நம்பி போகாதீர் அவள் நல்ல பணம் படைத்தவள் திருமணம் குழந்தை என்று வாழ்க்கையில் செட்டில் ஆனவள் நம் நிலைமை அப்படி இல்லை வாழ்கை இதை நம்பி அடுத்த கட்டம் இருக்கு அவளுக்கு இது பொருட்டல்ல ஏற்கனவே நல்ல வேலையில் உள்ளார். அரசு யாரையும் கழித்து விட்டு தனியாக போட நினைத்தாலும் முடியாது. அரசுக்கு எதிராக செயல்படுவது போஸ்டிங் போடுவது தடை ஆகும் அவள் பின்னாடி போகாதீர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி