ஜீரோ கலந்தாய்வு எதிர்பார்க்கும் தேர்வுதுறை உதவி இயக்குனர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2021

ஜீரோ கலந்தாய்வு எதிர்பார்க்கும் தேர்வுதுறை உதவி இயக்குனர்கள்

 

கல்வித்துறைக்கு உட்பட்ட தேர்வுத் துறையில் டி.இ.ஓ.,க்கள் அந்தஸ்தில் உள்ள உதவி இயக்குனர்களுக்கும் ஜீரோ கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநில அளவில் 37 உதவி இயக்குனர்கள் உள்ளனர். மதிப்பெண் சான்று வழங்கல், நகல் சான்றுக்கு பரிந்துரை செய்தல், சான்றிதழ்களுக்கான உண்மைத் தன்மை வழங்கல் உள்ளிட்ட ரகசியம் காக்கும் பணிகளில் இத்துறை அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். 2017 முதல் இவர்கள் ஒரே அலுவலகத்தில் மாறுதல் பெறமுடியாமல் பணியாற்றுகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: சென்னை தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளர், கண்காணிப்பாளர், உதவி, துணை இயக்குனர்கள் வரை அனைவரும் பல ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் மட்டும் பணியாற்றுகின்றனர். பதவி உயர்வு பெற்றாலும் அங்கேயே தொடர்கின்றனர்.

மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நடத்தப்பட்டது போல் உதவி இயக்குனர்களுக்கும் 'ஜீரோ' கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும். மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உதவி இயக்குனர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. அவற்றை நிரப்ப வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி