பொங்கல் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: அரசு பரிசீலிக்க ஜி.கே.வாசன் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2021

பொங்கல் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: அரசு பரிசீலிக்க ஜி.கே.வாசன் வேண்டுகோள்

 

பொங்கல் விழா முடியும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க பரிசீலனை செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழகத்தில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒமிக்ரானாலும் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தமிழகத்திலும் நோய் தடுப்புக்காக வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஆனாலும் நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தமிழக அரசு, ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றையும், பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும் கவனத்தில் கொண்டு மாணவர்களின் உடல் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு பொங்கல் விழா முடியும் வரை விடுமுறை அளிக்க பரிசீலனை செய்ய வேண்டும்.

1 comment:

  1. ஜி கே வாசன் தனது வாழ்நாளில செய்த அளப்பெரும் சாதனை இது. நாட்டில் வாழ்வாதாரம் சார்ந்த எத்தனையோ பிரச்சனைகளில் மக்கள் தவித்துக் கொண்டிருக்குடி போது, மாணவர்களுக்கு விடுமுறை விடுவது என்கிற புரட்சிகர அறிவிப்பை அறிவிப்பதற்கும் ஒரு தில் வேண்டுமல்ல வா ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி