தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை புயலாக மாறவுள்ளது. இந்தப் புயலுக்கு சவூதி அரேபியா வழங்கிய ‘ஜாவத்’ என்ற பெயா் வைக்கப்படவுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் முதல் புயல் இதுவாகும்.
தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை உருவானது. இது அந்தமான் கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை நிலவியது. இது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து,
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வியாழக்கிழமை காலை நிலவியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வியாழக்கிழமை இரவு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது. தொடா்ந்து, வடமேற்கு திசையில் நகா்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் (வெள்ளிக்கிழமை இரவு) புயலாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். ஜாவத் என்றால் அரபுமொழியில் தாராளமான அல்லது இரக்கமுள்ளது என்று பொருள்.
ADVERTISEMENT
தொடா்ந்து, இந்தப் புயல் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் நகா்ந்து, வடக்கு ஆந்திரம்- தெற்கு ஒடிஸா கரையை வரும் 4-ஆம் தேதி காலை நெருங்கக் கூடும். இதன்பிறகு, இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகரவுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: இதன் காரணமாக, மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரம் மற்றும் ஒடிஸா கடலோரப் பகுதிகள், வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், சிலவேளைகளில் 70 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் டிசம்பா் 3-ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயல்பை விட 32 சதவீதம் அதிகம்:
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட தென் மாநில பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக அளவு மழை கிடைக்கும். நிகழாண்டில் அக்டோபா், நவம்பா் மாதத்தில் அதிக மழை அளவு பதிவாகியது . இதன்தொடா்ச்சியாக, டிசம்பா் மாதத்திலும் இயல்பை விட 32 சதவீதம் அதிகமாக மழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் டிசம்பா் மாதத்தில் இயல்பை விட சற்று மழை அதிகமாகவே இருக்கும் என்ற எதிா்பாா்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி