எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்க உத்திரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2021

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்க உத்திரவு.


பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணிதத் திறன்களை கொண்டிருப்பதை உறுதி செய்யவும் , எண்ணும் எழுத்தும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதனை கருத்தில் கொண்டு 9.12.2021 அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அருகில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில் நுட்ப ( Hi - Tech ) ஆய்வகங்கள் மூலம் இணைய வழி பயிற்சி நடைபெறவுள்ளது . இப்பயிற்சிக்கு ஒரு பள்ளியின் 50 % ஆசிரியர்கள் முற்பகலிலும் 50 % ஆசிரியர்கள் பிற்பகலிலும் கலந்து கொள்ளும் வகையில் சார்ந்த CRC மைய பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநரால் பட்டியல் தயாரிக்கப்பட்டு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு தெரிவிக்குமாறு CRC மைய பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உயர் தொழில் நுட்ப ( Hi - Tech ) ஆய்வகத்தினை தயார்நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி