அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடைகளை மாணவர்கள் முறையாக அணிந்து வர வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 18, 2021

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடைகளை மாணவர்கள் முறையாக அணிந்து வர வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


தமிழகத்தில் பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  அரசாணையின் படி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , சென்னை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடைகளை பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளிக்கு முறையாக அணிந்து வருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வழங்கும் விலையில்லா சீருடைகளை பெற்றும் அவற்றை பயன்படுத்தாத அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்கள் தினந்தோறும் அரசு வழங்கிய சீருடைகளை அணிந்து வர அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

  1. G.O வில் மனமொத்த மாறுதல் கல்வியாண்டில் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்று உள்ளது .. தற்போது மனமொத்த மாறுதலில் மாறிக் கொள்ள முடியுமா..இல்லை பொதுமாறுதல் வரும்வரை காத்திருக்க வேண்டுமா..?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி