ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக் கொள்கை - தமிழ் விளக்கம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 19, 2021

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக் கொள்கை - தமிழ் விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மதிப்பு சேர்க்கிறது தமிழ்நாடு அரசு. . .!


நியமனத் தேர்வுகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கியது தமிழ்நாடு அரசு. . .!


தமிழ் வளர்ச்சித் துறை என்று தனி துறையும் அதற்குத் தனி அமைச்சரும் உள்ளது தமிழ்நாடு அரசு. . .!


ஆனால், அத்தமிழ்நாட்டு அரசின் கீழ் தமிழ் நாட்டில் உள்ள 99% தமிழ் மொழி வழிக் கல்விக் கூடங்களை நிர்வகிக்கும் பள்ளிக் கல்வித்துறை தனது துறையின் கீழான ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வுக் கொள்கையை ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டு பெரும்பான்மையான ஆசிரியர்களையும் திக்குமுக்காட வைத்துத் தமிழ் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் பள்ளிக் கல்வித்துறைக்கு முதற்கண் வாழ்த்துகள்!


பொது மாறுதல் கலந்தாய்வுக் கொள்கை குறித்து 14 பக்கங்களில் ஆங்கிலத்தில் வெளியான அரசாணையில் குறிப்பிடப்பட்டவற்றைத் தொகுத்து 3 பக்கங்களில் தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்.


இது 100% Google Translate அல்ல. எனவே, குழப்பமின்றி வாசிக்கலாம்.


அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டவை அனைத்தும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான கொள்கை மட்டுமே. இவற்றுள் எது எப்போது எப்படி பயன்படுத்தப்படும் என்பது சார்ந்த துறை இயக்குநர்களின் செயல்முறைகளைக்குப் பின்பே உறுதியாகும்.


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


General Teachers Transfer Counselling Norms 2021 - 22 | Tamil Explanation pdf - Download here

3 comments:

  1. G.O-வில் மனமொத்த மாறுதல் கல்வியாண்டில் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்று உள்ளது .. தற்போது மனமொத்த மாறுதலில் மாறிக் கொள்ள முடியுமா..இல்லை பொதுமாறுதல் வரும்வரை காத்திருக்க வேண்டுமா..?

    ReplyDelete
  2. மொழிபெயர்ப்பு செய்வதனால் எந்தப் பயனும் இல்லை... பொது மாறுதல் கலந்தாய்வு தேதியை வெளியிடுவதில் அல்லது வெளிக்கொணர்வதில் முனைப்பு காட்ட வேண்டியது அவசியம்

    ReplyDelete
  3. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநிரவல் நடைபெறுமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி