School Team Visit - தமிழகம் முழுவதும் பள்ளிகள் ஆய்வுக்கு உட்படுத்துவது ஏன்? எவ்வாறு? பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2021

School Team Visit - தமிழகம் முழுவதும் பள்ளிகள் ஆய்வுக்கு உட்படுத்துவது ஏன்? எவ்வாறு? பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம்

 

பள்ளிக்கல்வி - மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் - பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்துதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம் (School Education - Zone wise Review Meeting - Reviewing the Development of the School Education Department and the Activities of Student Welfare Programs - Letter from the Commissioner of School Education) ந.க.எண்: 59699/பிடி1/இ2/2021, நாள்: 25-11-2021...




தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக , அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு , மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 


இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களும் கலந்து கொண்டு ஆய்வு செய்ய இருக்கின்றனர். மேலும் , இவ்வாய்வுக்கூட்டம் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்தில் இரண்டு நாட்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். அக்கூட்டத்தின் முதல் நாளில் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பள்ளி பார்வை மேற்கொள்வர்.


இரண்டாம் நாள் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் தொடர்புடைய கள் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறும் . இக்கூட்டங்களுக்கான அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கூட்டப்பொருள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி