TET தேர்வு எழுத காத்திருப்போர் கவனத்திற்கு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2021

TET தேர்வு எழுத காத்திருப்போர் கவனத்திற்கு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு.

 

தமிழகத்தில் கடந்த சுமார் 19 மாதங்களாக பரவி வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. இது குறித்து தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் விரைவில் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார்.


TET தேர்வு விரைவில்:

தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) மூலம் தகுதியான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதாவது மத்திய அரசு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விதமாக TET தேர்வை அறிமுகம் செய்தது. அந்த வகையில் TET மற்றும் CTET தேர்வு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகத்தில் TET தேர்வானது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TNTRB) நடத்தப்பட்டு வருகிறது. மத்திய ஆசிரியர் தகுதி தேர்வானது (CTET) மத்திய அரசு சார்பில் CBSE நடத்தி வருகிறது.


TET தேர்வில் மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும், அதில் பொதுப்பிரிவினருக்கு 90 மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 82 மதிப்பெண்களும் எடுத்தால் தேர்ச்சி என்று அளிக்கப்படுகிறது. இந்த தேர்ச்சியானது வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது. மேலும் இந்த தேர்வுகள் NCTE விதிமுறைப்படி ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் TET தேர்வு 2013ம் ஆண்டு தொடங்கி 2014, 2017, 2019 என 4 தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டுகால அட்டவணைப்படி கடந்த 2020 ஜூலை மாதம் TET தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.


ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக TET தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் TET தேர்வு எப்போது வரும் என்று இடைநிலை ஆசிரியர் படித்துள்ள மற்றும் பட்டதாரி ஆசிரியர் படித்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் TET தேர்வு குறித்து தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் TET தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியானதும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றோருக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

30 comments:

  1. மீண்டூம் முதலிலிருந்தா!!! முடிலய சாமி

    ReplyDelete
  2. Hello Kalviseithi admin,
    If you post a message in this website, you will mention from where you received or mentioning magazine name etc. otherwise it will be treated as a fake news.

    ReplyDelete
  3. Today Hindu Tamil newspaper published about this news.

    ReplyDelete
  4. ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நபர்களுக்கு பணிநியமனம் போட்டித் தேர்வு அல்லது வேறுமுறையில் எதுவேண்டுமானாலும் முடித்து விட்டு அதற்கு பின்பு ஆசிரியர் தகுதித் தேர்வு வைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வருங்கால ஆசிரியரின் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது.

      Delete
  5. கடுமையாக அனைவரும் சேர்ந்து அரசை எதிர்க்க வேண்டும்

    ReplyDelete
  6. தாமதம் கொள்வதற்கு இது ஒரு வழி (தேர்வுக்கு பின்பு பின்பு போட்டித் தேர்வு நடத்துவது)

    ReplyDelete
  7. Brothers Vera vazhi illa kandippa tet conduct panniye aga vendiya kattayam bcos education fund varave illa state govt ku from central govt so ithu nammaloda vithi and kalathin Sathi

    ReplyDelete
  8. கடந்த இரு ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு நடத்த வில்லை அதனால் தான் 2021 தகுதி தேர்வு தேர்வு முடிவுகள் வந்தவுடன் இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும்2013 2017 2019 ல்தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கும் சேர்த்து போட்டி தேர்வு.பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 2014க்கு பிறகு இதுவரை நேரடியாக நிரப்ப படவில்லை.காரணம் பணிநிரவல் மாணவர் சேர்க்கை குறைவு.2020 2021ல் தான் கொரனோவால் அரசுப்பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.அதனால் அனைவருக்கும் வாய்ப்பு தருகிறது ஆசிரியர் தேர்வு வாரியம்

    ReplyDelete
  9. போட்டித்தேர்வு நடக்காது

    ReplyDelete
    Replies
    1. போட்டித்தேர்வு 200% உறுதி

      Delete
  10. இந்த பொழப்புக்கு என்கூட சேந்து பிச்சை எடுக்கலாம்.
    By போண்டா மணி டெட் பாஸ் 😄

    ReplyDelete
  11. பேப்பர் செய்திகள் எல்லாம் வெற்று செய்திதான் முதல்வர் நல்லச்செய்தியை அறிவிப்பார் போட்டித்தேர்வுக்கு வாய்ப்புபில்லை வழக்கு நிலுவையில்யுள்ளது முதல்வரை நம்புவோம்

    ReplyDelete
    Replies
    1. Enna method la posting poduvanga nu neenga ninaikkuringa

      Delete
    2. போட்டித்தேர்வுகள் நடக்காது முதல்வர் தேர்தல் அறிக்கையின்படி செயல்படுவார்

      Delete
    3. போட்டித்தேர்வு 200% உறுதி

      Delete
  12. Super gee neenga kadisi varikum posting podra idea illa pola

    ReplyDelete
  13. போட்டித்தேர்வு 100% நடக்கும்! நடந்தே தீரும்! இல்லையென்றால் பழைய அரசானையை நீக்கியிருப்பார்கள்! எனவே போட்டி தேர்வு வைத்துதான் நிரப்புவார்கள்! இதுகுறித்து அன்பில் மகேஷ்கூட சொல்லியிருக்கிறார்!

    ReplyDelete
  14. எந்த மூப்பு அடிப்படையிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கூடாது. மருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது.ஆனால் அந்த மருத்துவர்களை உருவாக்கும் ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்வது நியாயம்.ஆசிரியர்தகுதி தேர்வில் முதன்மை பாடத்தில் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடப்பதில்லை.அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்கள்முதன்மைபாடத்தில்150 மதிப்பெண்களுக்கு போட்டித் தேர்வு வைத்து அதன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முன் வர வேண்டும் அப்போது தான் மாணவர்களின் கல்வித்தரம் உயரும்.ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆங்கிலம் தமிழ் பாடத்தில்BED பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு 30 மதிப்பெண் மட்டுமே அவர்கள் பாடத்தில் கேட்கப்படுகிறது.மீதி 60 மதிப்பெண் சமூக அறிவியல் பாடங்களில் தான் கேட்கப்படுகிறது.இதனால் இவர்கள்தான் அதிக அளவில் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுகின்றனர்.அதனால் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் அனைவருக்கும் அவர்கள் முதன்மை பாடத்தில் 150 மதிப்பெண்களுக்கு போட்டித்தேர்வு வைத்து அந்த மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரித்து இடஒதுக்கீடு அடிப்படையில் அரசுப்பள்ளிகளில்ஏற்படும் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களை நிரப்பலாம்.இதனால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வராது.

    ReplyDelete
    Replies
    1. Ella subject lauum sethu vaikkura tet la high mark edukkuravnga lukku avanga subject knowledge irukkathu nu neenga epdi soldringa
      Namma innum pg teachers kidayathu avanga subject knowledge mattum pothum nu soldrathukku

      Bt assistant ku Ella subject knowledge un avasiyam
      So 1 exam ye pothum
      TET MARKS 90%+ EMPLOYMENT SENIORITY 10% is best method



      Etha exam than eluthurathu sutha time waste puducherry method is enough for all tet passed candidates

      Delete
  15. Tet passed candidates ug trb best way mathod

    ReplyDelete
  16. முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மறுபடியும் ஒரு தகுதி தேர்வு என்பது கண்டனத்திற்குரியது என்று தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். தற்போது அவர் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி