படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 பேர் தேர்வு முடிவு ரத்து: சென்னைப் பல்கலைக்கழகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2021

படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 பேர் தேர்வு முடிவு ரத்து: சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் முடிவுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னைப் பல்கலைக்கழகம். 


சென்னைப் பல்கலைக்கழகம் 1980-1981 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் சிறப்பு வாய்ப்பாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று அறிவித்திருந்தது. 


அதனை பயன்படுத்தி 2020 டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்கள் என்று குறிப்பிட்டு முறைகேடாக தேர்வு எழுதி பட்டம் பெற முயன்ற 117  பேர் தற்போது பிடிப்பட்டுள்ளனர். 


இதனைத் தொடர்ந்து தொலைதூரக் கல்வி படிப்பின் எந்த பட்டப்படிப்பிலும் சேராமலேயே ஆன்லைன் முறையில் தேர்வெழுதிய 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி படிப்பில் சேராத பலர் 2020 டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பங்கேற்று தேர்வு எழுதியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து ஆராய விசாரணைக் குழுவை அமைத்து சென்னைப் பல்கலைகழ துணைவேந்தர் கௌரி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி