தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு (TRUST) விண்ணப்பிக்க 20.01.2022 வரை கால நீட்டிப்பு செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு.
தற்போது , பல பள்ளிகளிலிருந்து தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் தேவை என்ற தகவல் பெறப்பட்டதைத் தொடர்ந்து , தேர்வர்களின் நலன் கருதி கீழ்க்குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வழங்குதல் மற்றும் பதிவேற்றம் செய்தல் குறித்தான் விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது . விண்ணப்பிக்க கால அவகாச நீட்டிப்பினைத் தொடர்ந்து 30.01.2022 அன்று நடைபெறவிருந்த ஊரகத் திறனாய்வு தேர்வு 20.02.2022 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விவரங்களை அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கவும் மற்றும் தலைமையாசிரியர்களின் வாயிலாக ஏற்கெனவே இத்தேர்வினுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கும் , தற்பொழுது விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கும் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது . விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் பதிவேற்றம் செய்தல் குறித்த விவரங்களை கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி