01.08.2021 நிலவரப்படி கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2022

01.08.2021 நிலவரப்படி கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 

ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் 01.08 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகள் வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் ( BT Staff Fixation ) பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது. 


அவ்வாறு மேற்படி பணியாளர் நிர்ணயம் 2021-22ம் கல்வியாண்டிற்கான 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது.


அதனடிப்படையில் இக்கல்வியாண்டில் ( 2021-22 ) அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மேற்படி பணியாளர் நிர்ணய கணக்கீட்டின்படி ( 6-8க்கு 1:35 என்ற விகிதாச்சாரப்படியும் 9-10க்கு விகிதாச்சாரப்படியும் ) 1:40 என்ற கூடுதல் தேவையுள்ள பள்ளிகள் ( Need Schools ) கண்டறியப்பட்டுள்ளது . கானலே , மேற்படி கூடுதல் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு மாணவர்களின் கல்வி நலன் கருதி இயக்குநரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரிக்காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு ( கூடுதல் தேவையுள்ள பள்ளிகள் ) அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது . மேற்படி கூடுதல் பணியிடங்கள் அனுமதித்து வழங்கப்பட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தகவல் அளித்தும் , சம்மந்தப்பட்ட பள்ளியில் பராமரித்து வரும் அளவுகோல் பதிவேட்டில் ( Scale Register ) பதிவுகள் மேற்கொள்ளவும் , இப்பணியிடங்களை நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களாக கருதிட மேற்கொள்ளுமாறு அனைத்து அறிவுறுத்தப்படுகிறது.




9 comments:

  1. Sir post sanctioned post with school name

    ReplyDelete
  2. வாகன்சி பாத்தாச்சு இல்ல.... இனி அறுத்து தள்ளப்படும்.. ஆசிரியர் நியமனமா???
    கனவு காணவேண்டாம்.
    ஏன்னா இது விடியல்...
    உபரில எல்லாம் முடிஞ்சுடும்...

    ReplyDelete
    Replies
    1. Negative va ve eppaum unganala epdi pesa mudithu

      Delete
    2. நெகடிவ் இல்ல ஜி... நடந்தது நடக்கறது நடக்க போறது அதான்.. எத்தனை தடவ பாத்து இருக்கோம் ...

      Delete
    3. TRB fans club Sir solrathu sari thaaaneee... Ithu pola ethana paaathu irupom..... Ipaum solran 2013 candidates selfish ah irukara varaikum yaarukkume posting kedaikaathu.... 3 batch um mix pannave kudaaathaaaam..... Irukara vacant ellam 2013 batch ke podanum nu solranga.... Athu mudiumaaaa..... Apadi 13 ku mattume posting potta kandipaaa naane court la case file panni stay order vaangiduven... En frd 2017 candidate thaan avan ippo lawyer ah work panran.... Avana vachi essay ah vase pottuduven....

      Delete
    4. yarupa selfish ungaluke ivalavu kobam varuthe 2013 candidates pathi yosinga avanga ematram romba athigam kashtam sollave mudiyathu ethana per suicide paniyurukanga theriyuma ? ungaluku mattumthan lawyer theriyuma vera yarukum theriyatha 5 years backla vantha ungaluke ivalavu iruntha avangaluku neraya irukum

      Delete
  3. நண்பர்ளே பட்டதாரி ஆசியர்ள் பணியிடங்கள் நிரப்ப சரண் செய்யப்பட்ட இடங்களை திரும்பப் பெற்றுத்தான் நிர்ணயம் செய்கிறார்கள்...தயவுசெய்து காலத்தைவீணடிக்காமல் Pgtrbக்கு படியுங்கள்
    இந்த வாய்ப்பையும் தவரவிட்டுவிடதீர்கள்
    ஏனெனில் Pgயில் வரும் May மாதஓய்வாகும் பணியிடங்கள் வரை தேர்வின் மூலம் நிரப்பப்போகிறார்கள் இதைவிட்டால் நாம் Pgtrbக்கே குறைந்தது நான்காண்டுகள் காத்திருக்கவேண்டும்.Pls படியுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி