2021-22 ஆம் கல்வி ஆண்டு பணியாளர் நிர்ணயம் அறிவுரை வழங்கியது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2022

2021-22 ஆம் கல்வி ஆண்டு பணியாளர் நிர்ணயம் அறிவுரை வழங்கியது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


Staff Fixation DEE Proceeding - Download here...

 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள உதவி பெறும் தொடக்கப் பள்ளி / நடுநிலைப் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009 ன் படியும் பார்வை 2 ல் காணும் அரசாணையின்படியும் ஒவ்வொரு ஆண்டும் ( Periodcally ) ஆசிரியர் / மாணவர்கள் பணியிடம் நிர்ணயம் செய்வது போன்று இவ்வாண்டும் 01,08,2021 உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிடம் நிர்ணயம் மேற்கொள்வது சார்ந்து ஏற்கெனவே நடைமுறையில் உள்ள உரிய படிவங்களில் 01,08,2021 அன்று பள்ளி மாதாந்திர அறிக்கை மற்றும் EMIS அடிப்படையில் எவ்வித தவறுக்கும் இடமின்றி விவரங்களை பூர்த்தி செய்ய அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குவது சார்பாகவும் மேலும் மேற்குறித்த படிவங்களை பூர்த்தி செய்யும் போது கீழ்குறித்த அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றுமாறும் தெரிவிக்கப்படுகிறது . அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் உடனடி கவனம் ஈர்க்கப்படுகிறது.

1 comment:

  1. வருடம் முழுவதும் ஆசிரியர் பணியிட நிர்ணயம் என சொல்லியே இந்த வருடத்தையும் போக்கிவிடுவார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நபர்களுக்கு பெரிய நாமம் தான் இந்த வருடமும் போடுவார்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தை செயல்படா வாரியம் என மாற்றிவிடலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி