ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஜன., 21ல் வட்டார கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2022

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஜன., 21ல் வட்டார கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்

 

வட்டார கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்; ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் தகவல் 


ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஜன., 21ல் வட்டார கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் மயில் தெரிவித்தார். 


மாநில பொது செயலாளர் கூறியதாவது:பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தவும், ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் மாறுதல் செய்த ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு முன் பழைய இடத்தில் பணியமர்த்த வேண்டும். 


புதிய மாவட்டங்களில் ஒன்றிய எல்லை வரையறையில் வேறு ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பிற அரசு துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல் சொந்த ஒன்றியத்திற்கு செல்ல வாய்ப்பு தர வேண்டும். 


கடந்த ஆண்டு கலந்தாய்வு நடைபெறாததால் 2020-2021 ம் கல்வியாண்டின் காலிப்பணியிடங்களுக்கு 1.1.2020 முன்னுரிமையின்படியும், 2021-2022ல் ஏற்பட்ட காலியிடங்களுக்கு 1.1.2021 முன்னுரிமைப்படி பதவி உயர்வு வழங்க வேண்டும். 


கடந்த ஆண்டு உபரி பணியிட மாறுதலில் வேறு ஒன்றியங்களுக்கு மாற்றப்பட்டவர்கள் சொந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு தேவைக்கு ஏற்ப ஈர்த்து கொள்ள வேண்டும். மலைசுழற்சி மாறுதல் அரசாணை ரத்து செய்ததை திரும்ப பெற வேண்டும்.


1.1.2022 ல் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்,மாணவர் விகிதம் கணக்கிட்டு ஆசிரியர் நிர்ணயம் செய்ய வேண்டும்.எமிஸ்சில் ஆசிரியர்களின் அன்றாட கற்பித்தல் பணி பாதிக்கும் வகையில் தேவையாற்ற பதிவுகளை மேற்கொள்ள நிர்பந்திப்பதையும், அதிக பதிவேடுகளை பராமரிக்க கூறுவதை கைவிட வேண்டும். 


கொரோனா காலத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கும் நேரடி பயிற்சியை கைவிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்றார்.

4 comments:

  1. நம்ம ஆட்சி தான் நடக்கிறது. எதற்கு ஆர்பாட்டம். நாமே 7% DA hike தான் எதிர் பார்த்தோம். கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுத்தார், நம் முதல்வர்.

    ReplyDelete
  2. நிதி நெருக்கடி காலத்திலும்,
    முழு DA கொடுத்துள்ளார்,
    அதற்கு விசுவாசமாக இருக்கலாமே

    ReplyDelete
  3. Again lock down comes soon. We enjoy teachers.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி