ஜனவரி 8,9 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும்; டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2022

ஜனவரி 8,9 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும்; டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு..!

 

ஜனவரி 8,9 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டடக்கலை / திட்ட உதவியாளர் பணிக்கு ஜனவரி 8ல் தேர்வு நடைபெறவுள்ளது. ஊரடங்கு நாட்களில் போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கட்டடக் கலை திட்ட உதவியாளர் தேர்வு & ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வணையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து வெளியிட்டுப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்.032. நாள் 06.012022 இல் ஊரடங்கு நாளன்று போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி என்ற தலைப்பில் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தினால் ஏற்கனவே 08.01.2022 முப மற்றும் பிப (சனிக்கிழமை) மற்றும் 09.01.2022 முப மற்றும் பிப (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுவதாக இருந்த கீழ்க்கண்ட எழுத்துத் தேர்வுகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டபடி நடைபெரும் என தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி