மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2022

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

 

மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளாா்.


இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் பிளஸ் 1 முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் மதங்களை சாா்ந்த மாணவா்களிடம் இருந்து 2021-22-ஆம் ஆண்டுக்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித் தொகை பெறுவதற்கு இணையதள முகவரியில் விண்ணப்பிக்க ஜன.15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


எச்சரிக்கை: மேலும், அனைத்து கல்வி நிலையங்களிலும் சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை கோரி மாணவா்களிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் (பள்ளி படிப்பு உதவித்தொகை ஜன.15, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை ஜன.31) தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் சரிபாா்க்க வேண்டும். தகுதியுள்ள சிறுபான்மையின மாணவா்களின் விண்ணப்பத்தை சரிபாா்ப்பதில் சுணக்கம் காட்டும் அல்லது தவறும் கல்வி நிலையங்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


இத்திட்டம் தொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

 1. டெட் தகுதிதேர்வு விசயத்தில் ஏற்பட்ட அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு கொள்கையை கடந்த ஆட்சியாளர்கள் புறக்கணித்துதான்.

  தமிழகத்தில் ஆசிரியர் பணியானது எந்த குழப்பமும் இல்லாமல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பின் அடிப்படையில் நடைபெற்று வந்தது. ஒன்றிய அரசு கொண்டுவந்த கல்வி உரிமை சட்டப்படி ஆசிரியர்பணி பெற ஆசிரியர் தகுதி தேர்வையும் ஒரு தகுதியாக சேர்த்து பணி நியமனம் செய்ய உத்தரவிட்டது.

  அப்படியானால் தமிழக அரசானது என்ன செய்திருக்க வேண்டும்?

  நடைமுறையில் இருந்த வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படியில் டெட் தேர்ச்சியை ஒரு தகுதியாக இணைத்து பணி நியமனம் செய்திருக்க வேண்டும்.

  அதற்கு மாறாக கடந்த அரசானது வெயிட்டேஜ் எண்ணும் தவறான முறையை அறிமுகம் செய்து பின்னர் திரும்ப பெற்று கொண்டது. மேலும் வரும் காலங்களில் நியமன தேர்வு நடத்தி பணி நியமனம் சைய்யப்படும் என்ற அரசாணை 149 ஐ வெளியிட்டது. ஆனால் இந்த முறை நீட் தேர்வை போன்று கொடுமையானது அதில் ஓராயிரம் சிக்கல்கள் உள்ளது என்பதை இந்த அரசு உணர்ந்து உடனடியாக அரசாணை 149 ஐ திரும்பப்பெற வேண்டும்.

  தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படியில் சிலர் பணியானை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர். அது முற்றிலும் தவறானது. ஏனெனில் நடத்த பட்டது தகுதி தேர்வு போட்டி தேர்வு அல்ல .

  உதாரணதிற்கு : 6 ம் வகுப்பில் 95 மதிப்பெண் பெற்றாலும் 35 மதிப்பெண் பெற்றாலும் அது தேர்ச்சி என்று தான் கருதப்படும் அதுதான் தகுதி தேர்வு . ஆனால் போட்டி தேர்வு என்பது 12 ம் வகுப்பிற்கு நடத்தப்படும் தேர்வு போன்றது அதில் மதிப்பெண்ணுக்குத்தான் முக்கியத்துவம்.

  எனவே மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட இந்த அரசானது வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படியில் டெட் தேர்ச்சியை ஒரு தகுதியாக இணைத்து பணி நியமனம் செய்வதுதான் ஒரு சரியான தீர்வாக அமையும்.

  அதை விடுத்து வேறு எந்த முறையிலும் ஆசிரியர் பணி நியமனம் செய்யுமானால் அது கடந்த ஆட்சி காலத்தில் செய்ததை போலவே பணி நியமனம் செய்வதை தவிர்பதற்காக செய்யும் ஒரு நடவடிக்கையாகதான் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Abcd theriyuma unakku ....padaththavarukke velai ammavin atchiyin oru mayil kal mundam

   Delete
 2. நல்ல தீர்வு

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி