பள்ளிகளுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - ஒப்புதல் அளித்தல் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்! - kalviseithi

Jan 5, 2022

பள்ளிகளுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - ஒப்புதல் அளித்தல் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்!

 

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - அரசாணை அனுப்புதல் - சார்பு.


அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கூடுதலாக 1575 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு , இந்த பணியிடங்களுக்கான பாடவாரியான பள்ளிகளின் பட்டியல் பார்வையில் காண் அரசாணையின்படி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.


இந்த அரசாணையை குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளுக்கு அனுப்பி பள்ளிகளின் அளவைப்பதிவேட்டில் பதிவு செய்யுமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளுக்கு தற்போதைய மாணவர்களின் எண்ணிக்கையின்படி தேவையானதா என்பதை உறுதி செய்து கொண்ட பின்பு பள்ளிகளுக்கு அளிக்குமாறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து பள்ளிகளுக்கு அளிக்க இயலாத கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பள்ளிக்கல்வி இயக்குநருக்கு சரண் செய்ய வேண்டும் என்றும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மாவட்டக்கருவூல அலுவலகத்திற்கு அரசாணையினை அனுப்பி வைக்குமாறும் இச்செயல்முறைகளை பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதலை அளிக்குமாறு முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


இணைப்பு


அரசாணை ( நிலை ) எண் .18 , பள்ளிக் கல்வித் ( ப.க 2 ( 2 ) ) துறை , நாள் 01.02.2021 - ன்படி தரம் உயர்த்தப்பட்ட 1575 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் ( முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ) பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் விவரம் : இணைப்பு – II

DSE - 1575 PGT Post Upgradation .pdf - Download here...

2 comments:

  1. 50 வயது வரை TRB தேர்வு எழுலாம் 51, 52 இருப்பவர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் போடலாம் அல்லவா தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் தான் செயல்படுத்த முடியும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி