02.01.2022 ஆயக்குடி மையத்தின் குறிப்புகள் மற்றும்டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2022

02.01.2022 ஆயக்குடி மையத்தின் குறிப்புகள் மற்றும்டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள் !


7 ஆம் வகுப்பு தமிழ்

நூல்கள் – நூல் ஆசிரியர்கள்

முக்கிய வினா விடைகள் 

மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்கதை, சங்கொலி ஆகிய நூல்களை எழுதியவர் – நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்


நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர் – உடுமலை நாராயணகவி


அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் ஆகிய நூல்களை எழுதியவர் – சுரதா


சிறந்த தமிழ் கவிதைகளை தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளவர் – ராஜமார்த்தாண்டம்


சங்கக்கால மக்களின் வீரத்தை கருப்பொருளாக கொண்டு புலி தங்கிய குகை என்னும் தலைப்பில் பாடலை பாடியவர் – காவற்பெண்டு


காவற்பெண்டு பாடிய ஒரே ஒரு பாடல் எந்த நூலில் உள்ளது – புறநானூறு


வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலை எழுதியவர் – நா. வானமாமலை


ஆங்கில மொழியில் ஆலன் எழுதிய அறிவு நூல்களில் ஒன்றை மனம் போல் வாழ்வு என்று தமிழில் மொழிபெயர்த்தவர் – வ.உ.சி


மெய்யறிவு, மெய்யறம் ஆகிய நூல்களை எழுதியவர் – வ.உ.சி


இரா.பி.சேது இயற்றிய நூல்கள் – தமிழின்பம், ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம் – ஊரும் பேரும், மேடைப்பேச்சு


பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய இரு நூல்களையும் எழுதியவர் – கடியலூர் உரத்திரங்கண்ணனார்


பத்துப்பாட்டு நூல்கள்:


திருமுருகாற்றுப்படை – நக்கீரர்


பொருநராற்றுப்படை    – முடத்தாம கண்ணியார்


பெரும்பாணாற்றுப்படை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்


சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்


முல்லைப்பாட்டு – நப்பூதனார்


மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்


நெடுநல்வாடை    – நக்கீரர்


குறிஞ்சிப்பாட்டு – கபிலர்


பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்


மலைபடுகடாம்   – பெருங்கௌசிகனார்


கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள 35 பாடல்களையும் பாடியவர் – மருதன் இளநாகனார்


மருதத்தினை பாடுவதில் வல்லவர் – மருதன் இளநாகனார்


ஜீல்ஸ் வெர்ன் எழுதிய புதினங்கள் – எண்பது நாளில் உலகத்தை சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம், ஆழ்கடலின் அடியில்


இன்பத்தமிழ் என்னும் தலைப்பில் கவிதை எழுதியவர் – பாரதிதாசன்


பாரதிதாசன் எழுதிய நூல்கள் – பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம்


நாலடியார் நூலின் ஆசிரியர் – சமண முனிவர்


வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை, உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம், சிந்தனை களஞ்சியம் ஆகிய நூல்களை எழுதியவர் – திருக்குறளார் வீ. முனிசாமி


பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை எழுதியவர் – சுப்ரபாரதிமணியன்


குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியவர் – சுப்ரபாரதிமணியன்


சுப்ரபாரதிமணியன் எழுதிய நூல்கள் – பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை, பள்ளி மறுதிறப்பு


நன்னூலை எழுதியவர் – பவணந்தி முனிவர்


தேனரசன் எழுதிய நூல்கள் – மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம்


காளமேகப்புலவர் எழுதிய நூல்கள் – திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல், தனிப்பாடல்கள்


பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் – முன்றுறை அரையனார்


மலை அருவி – கி.வா. ஜகந்நாதன்


திருப்புகழ் பாடியவர் – அருணகிரிநாதர்


காவடிச்சிந்தைப் பாடியவர் – அண்ணாமலையார்


குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூடராசப்பக் கவிராயர்.


இதய ஒலி என்னும் நூலை எழுதியவர் – டி.கே. சிதம்பரநாதர்


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் – பொய்கையாழ்வார்


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் – பூதத்தாழ்வார்


நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை பாடியவர்கள் – பன்னிரு ஆழ்வார்கள்


நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் – நாதமுனி


அறநெறிச்சாரம் என்னும் நூலை எழுதியவர் – முனைப்பாடியார்


குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்கள் – நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள்


இயேசுகாவியத்தை எழுதியவர் – கண்ணதாசன்


மலைப்பொழிவு என்னும் தலைப்பில் நமக்கு வந்துள்ள பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது – இயேசுகாவியம்


சே. பிருந்தா எழுதிய நூல்கள் – மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை


தன்னை அறிதல் என்ற கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது – மகளுக்குச் சொன்ன கதை


பாவண்ணன் எழுதிய நூல்கள் – வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம்.

தினமும் டெலகிராமில்  300 வினாக்கள் கொண்ட இலவச ஆன்லைன் தேர்வெழுத

இங்கே சொடுக்கவும்

தமிழ் முக்கிய குறிப்புகள் படிக்க

இங்கே சொடுக்கவும்

குரூப் 2 & 4 முக்கிய குறிப்புகள் படிக்க

இங்கே சொடுக்கவும்

அறிவியல் முக்கிய குறிப்புகள் படிக்க

இங்கே சொடுக்கவும்

அரசியலமைப்பு முழுவதும் படிக்க

இங்கே சொடுக்கவும்

02.01.2022 ஆயக்குடி குறிப்புகள் படிக்க

இங்கே சொடுக்கவும்No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி