இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு வழி.... - kalviseithi

Jan 18, 2022

இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு வழி....

 

ஒருவரை பார்த்ததுமே அவரை யார் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் மூளையானது, சில சமயங்களில், அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடும்.


இப்படியான சூழல்கள் பலவகைப்படும். ஒருவர் நம்மிடம் வந்து என்னைத் தெரியவில்லையா? என்று ஆரம்பித்தாலே நமது மூளை நிலைதடுமாறிவிடும்.  அய்யய்யோ எனக்குத் தெரியாது என்று நமது மூளையானது இரண்டு கைகளையும் வானை நோக்கித் தூக்கிவிட்டு தலைதெறிக்க ஓடிவிடுவதும் உண்டு. அப்போதுதான் நாம் அசடுவழிய.. தலையை சொரிந்தபடி தெரியாது என்று சொல்லலாமா? தெரியும் என்று சொல்லி சமாளிக்கலாமா? என ஆழ்ந்த யோசனையில் இருப்போம். அதற்குள் நம்மைப் பார்த்து உற்சாகம் கொப்பளிக்க ஓடி வந்தவர் ஏற்கனவே ஃபியூஸ் போன பல்பாகியிருப்பார்.


சரி.. ஒருவரைப் பார்த்ததும் இவர் நமக்கு நன்றாக தெரிந்தவராயிற்றே என்று சொல்லும் மூளையானது.. ஆவர் யார்? எப்படித் தெரியும் என்பதை சொல்ல மறுத்துவிடும். அவ்வளவுதான் அவரைப் பற்றி நாம் யோசிப்பதற்குள் அந்த இடம் காலியாகிவிடும்.


இப்படி யார், என்ன பெயர், எப்படித் தெரியும் என்று குழம்பும் சூழ்நிலைகள் பலவிதம். ஆனால், அவற்றைக் கண்டுபிடிக்கும் விதம்மட்டும்தான் புதுவிதம்.


அதாவது, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆராய்ச்சியில், இதுபோல ஒருவரின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை நினைவில் கொண்டு வருவதற்கு சிறந்த வழி உறக்கம் என்று தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார்கள்.


நமது நினைவாற்றலை புதுப்பித்து, முகம் - பெயரை கண்டறிய, எந்த இடையூறும் அற்ற மிக மெல்லிய உறக்க அலையே போதுமானது என்கிறது அந்த ஆய்வு முடிவு.


நேச்சர் பார்ட்டனர் அறிவியல் இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. 


ஏற்கனவே இருக்கும் ஆய்வுகளும், இந்த புதிய ஆய்வும் கூறுவது என்னவென்றால், மிக ஆழ்ந்த உறக்கம் மூலமாக, நமது நினைவாற்றலின் திறன் அதிகரித்து, அது புதுப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் நாம் மறந்த பல விஷயங்களை மீண்டும் நினைவுகூற முடியும் என்கிறார் பிஎச்டி மாணவரான நாதன் வொய்ட்மோர்.


அதேவேளையில், ஆழ்ந்தஉறக்கமற்ற தன்மை, நிச்சயம் நினைவாற்றலுக்கு உதவாது, ஏற்கனவே இருக்கும் சிக்கலை பெரிதாக்கும் என்றும் கூறுகிறார்கள்.


எனவே, யாரையாவது பார்த்ததும் பெயர் நினைவில் வரவில்லையா? வெகு நாளாகத் தேடிக் கொண்டிருக்கும் நண்பரின் முகம் மறந்துவிட்டதா? எங்கும் தேடி அலைய வேண்டாம். ஒரு தலையணை இருந்தால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு (ஏற்கனவே மறந்ததுதான் பிரச்னையே என்கிறீர்களா?) நன்கு ஆழ்ந்து உறங்குங்கள். பிறகு அமைதியாக உங்கள் நண்பரின் முகத்தை அல்லது பெயரை நினைவுகூருங்கள். நிச்சயம் நினைவில் வரும். அப்படியும் வரவில்லை.. வேறு என்ன மீண்டும் உறங்குங்கள்..


நன்றி : தினமணி

3 comments:

  1. சுத்த பேத்தலா இருக்கே,ஒருவர் நம்மிடம் வந்து என்னைதெரியலயா என்று கேட்டால் நினைவுக்கு கொண்டு வரவேண்டும் என்றால் தூங்கிவிட வேண்டுமா?

    ReplyDelete
  2. ஆமாம் இல்ல... ஒரு ஆள் எலெக்‌ஷன் முன்னாடி ஜிபிஎஃப் டெட் போஸ்டிங் நகைக்கடன் தள்ளுபடி டாஸ்மாக் ஒழிப்பு பொங்கலுக்கு 5000 ஓவா நீட் எக்ஸாம் ரத்து அப்பிடி இப்பிடி சிக்ஸர்னு ஃபோர்னு அள்ளி விட்டுச்சே.... அந்த கதையோனு உள்ள வந்து பாத்தேன்... இவன் வேற மாரி....

    ReplyDelete
  3. இதெல்லாம் ஒரு செய்தி என்று வெளியிட்ட நீ ஒரு மொல்லமாரி.. வேற வேலை வெட்டி இல்லாம இதை படிச்ச நான் ஒரு முடிச்சவிக்கி .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி