14 ஆண்டாக பதவி உயர்வுக்கு கணினி பயிற்றுநர் காத்திருப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2022

14 ஆண்டாக பதவி உயர்வுக்கு கணினி பயிற்றுநர் காத்திருப்பு.

 

கடந்த, 14 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்படுவதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


கடந்த, 1999ம் ஆண்டு கணினி அறிவியல் பிரிவு மேல்நிலை வகுப்புகளில் துவக்கப்பட்டது. மாணவர்களுக்கு கணினி செயல்பாடுகளை கற்பிக்க, பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது முதல் தற்போது வரை கணினி பயிற்றுநர்கள் நிலை 1 என்ற பெயரில் பணி மேற்கொள்கின்றனர்.


மேல்நிலை பாடங்களின் அடிப்படையில், பொதுக்கல்வி, தொழில்கல்வி என்ற பிரிவுகள் உள்ளன. இயற்பியல், வேதியியல், கணிதம், வரலாறு, வணிகவியல் போன்று கணினி அறிவியல் பாடமும் பொதுக்கல்வி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை மட்டும் தொழிற்கல்வி பிரிவில் வைத்துள்ளதாக அதிருப்தி எழுந்துள்ளது.


தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பரசுராமன் கூறுகையில்,''கடந்த, 2008ம் ஆண்டு கணினி பயிற்றுநர்களாக நிரந்தர பணியில் சேர்ந்தோம். அரசு விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பதவி உயர்வு கட்டாயம் வழங்கவேண்டும். கணினி அறிவியல் என்பது தற்போது, மாணவர்களின் முதல் தேர்வாக உள்ளது. முதுகலை ஆசிரியர்களுக்கு இணையான கல்வி தகுதி, எங்களுக்கும் உள்ளது. எங்களது, கணினி பயிற்றுநர்கள் நிலை -1 என்ற பெயரை முதுகலை ஆசிரியர் என பெயர் மாற்றி 1,515 பேரின் பதவி உயர்வுக்கு அரசு வழிவகுக்க வேண்டும்,'' என்றார்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி