போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை ஏற்படுத்தி பாடங்கள் கற்பிக்கப்படும் : தமிழக அரசு - kalviseithi

Jan 25, 2022

போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை ஏற்படுத்தி பாடங்கள் கற்பிக்கப்படும் : தமிழக அரசு

 போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை அமைப்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி மற்றும் இதர போட்டி தேர்வுகளுக்கு தயாராகுவோருக்காக கல்வி தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


அதில், ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணித் தேர்வுகள், இந்திய பொறியியல் பணி  தேர்வுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள் , staff selection commission நடத்தும் போட்டித் தேர்வுகள், வங்கித் தேர்வுகள்,  ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் என பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித்தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் கல்வித் தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுக்கு என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் தனி அலைவரிசை ஏற்படுத்தி போட்டித் தேர்வுகளுக்கான பாடங்கள் ஒளிபரப்பப்படும். இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவிடப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி