முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2022

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியன்


மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று ( 19.01.2022 ) முதுநிலை பட்ட மேற்படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.


அது தொடர்பான விவரங்கள் பின்வருமாறு , முதுநிலை பட்ட மேற்படிப்பிற்கான கலந்தாய்வு MD / MS மொத்த இடங்கள் - 2216 , அகில இந்திய ஒதுக்கீடு -1053 , மாநில ஒதுக்கீடு 1163 , மாநில ஒதுக்கீடுக்கான தரவரிசை பட்டியல் இன்று 19.01.2022 வெளியீடு . மாநில ஒதுக்கீடுக்கான ஆன்லைன்கலந்தாய்வு தொடங்கும் நாள் 20.01.2022


இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு 2021-2022 அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள மாநில ஒதுக்கீடு இடங்கள் 6999. தரவரிசை பட்டியல் வெளியீடு 24.01.2022 . மாற்று திறனாளிகள் , ராணுவவீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி கலந்தாய்வு 27.01.2022 7.5 சதவிதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு 28.01.2022 மற்றும் 29.01.2022 . மற்றப்பிரிவினர்களுக்கு 30.01.2022 முதல் இணையதள வாயிலாக கலந்தாய்வு நடைபெறும்.


இதை பற்றிய தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் . www.tnmedicalselection.org , www.tnhealth.tn.gov.in


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி